Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய அரசின் மூத்த அறிவியல் அலுவலர்களுடன் பிரதமர் சந்திப்பு

மத்திய அரசின் மூத்த அறிவியல் அலுவலர்களுடன் பிரதமர் சந்திப்பு


மத்திய அரசின் மூத்த அறிவியல் அலுவலர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். இந்த கூட்டத்தில் நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி.கே. சரஸ்வத், மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் டாக்டர். ஆர். சிதம்பரம் மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொடர்பான துறைகளின் செயலர்களும் பங்கேற்றனர்.

பல்வேறு அறிவியல் ஆய்வு துறைகளின் முன்னேற்றங்கள் குறித்து பிரதமரிடம் அலுவலர்கள் விவரித்தனர்.

இந்தியாவின் செழிப்பிற்கும் வளர்ச்சிக்கும் அறிவியல், தொழில்நுட்பம், புதுக் கண்டுபிடிப்புகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் கூறினார். நாட்டின் பிரச்சினைகளை சரி அறிவியல் மூலமாக செய்ய மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அதிக கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் கூறினார்.
விளையாட்டு துறையில் திறன்மிக்கவர்களை கண்டறிவதை எடுத்துக்காட்டாக கூறிய பிரதமர், பள்ளி குழந்தைகள் மத்தியில் சிறந்த அறிவியல் திறன் கொண்டவர்களை கண்டறியும் முறையை கண்டறிய வேண்டும் என்றார்.

அடிமட்ட அளவில் பல்வேறு நிறைய புதிய கண்டுபிடிப்புகள் கொண்டுவரப்படுகிறது. அறியப்படாத விஷயங்களை உடைத்து, அடிமட்ட அளவில் கொண்டவரப்படும் வெற்றிகரமான புதிய கண்டுபிடிப்புகளை ஆவணப்படுத்தி, மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். பாதுகாப்பு வீரர்கள் மேற்கொள்ளும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் பேசினார்.

வேளாண் துறையில், அதிக அளவு புரத சத்து மிகுந்த பருப்பு வகைகள், செறிவூட்டிய உணவுகள், ஆமணக்கில் கூட்டுதல் மதிப்பு சேர்ப்பது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி , இதனை துரிதப் படுத்த வேண்டும் என்ற பிரதமர் வலியுறுத்தினார்.

எரிசக்தித் துறையில், சூரியஒளி சக்தியின் திறன்களை முழுமையாக பயன்படுத்தி , மற்ற எரிசக்தியின் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்றார் பிரதமர்.

இந்திய விஞ்ஞானிகள், சவால்களை எதிர்த்து வெற்றிபெற்று, இந்தியாவின் சாமனிய மனிதனின் வாழ்க்கையும் மேம்படுத்தவதற்கான வழிகளை வழங்குவார்கள் என்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளதாக கூறிய பிரதமர், 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் 2022 –க்குள் அடைய வேண்டிய இலக்குகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.