Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய அரசின் திட்டமான தேசிய ஆயுஷ் இயக்கத்தை (என்.ஏ.எம்.) 01.04.2017 முதல் 31.03.2020 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

சிறப்பு அம்சங்கள்:

குறைந்த செலவிலான ஆயுஷ் சேவைகள் உலகளாவிய அளவில் அணுகச்செய்யும் நோக்கத்துடன் ஆயுஷ் அமைச்சகத்தால் என்.ஏ.எம். இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் இதர நோக்கங்கள்:-
ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மேம்படுத்துதல்

ஆரம்ப சுகாதார மையங்களில் ஆயுஷ் வசதிகளை ஏற்படுத்துதல்

சமூக சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள்

ஆயுஷ் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு ஆயுஷ் மருந்தகங்களை மேம்படுத்துவதன் மூலம் மாநில அளவில் நிறுவனத் திறனை பலப்படுத்துதல்

மருந்து உரிம ஆய்வகங்கள் மற்றும் ஆயுஷ் அமலாக்க நுணுக்கம்,

தரமான மூலப் பொருட்களை தொடர்ந்து விநியோகிக்கும் வகையில் நல்ல வேளாண் நடைமுறைகளைப் பின்பற்றி மூலிகைச் செடிகள் பயிரிடப்படுவதை ஆதரித்தல் மற்றும் மூலிகை செடிகள் சேமிப்பு மற்றும் சந்தைப்படுத்தலுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குதல்,

நாட்டில் குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் உள்ளடங்கிய பகுதிகளில் ஆயுஷ் சுகாதார சேவைகள்/கல்வி அளிக்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் சுகாதார சேவைகளில் உள்ள இடைவெளியை என்.ஏ.எம். போக்குகிறது. என்.ஏ.எம். கீழ் இத்தகைய பகுதிகளின் குறிப்பிடத்தக்க தேவைகள் மற்றும் அவற்றின் வருடாந்திர திட்டங்களுக்கு அதிக ஆதாரங்களும் அளிக்க சிறப்புக் கண்ணோட்டம் அளிக்கப்படுகிறது.

இந்த இயக்கத்தின் கிடைக்கக்கூடிய வெளிப்பாடுகள் வருமாறு:

  1. ஆயுஷ் சேவைகளை அளிக்கும் சுகாதார வசதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு மற்றும் மருந்துகளும் பயிற்சி பெற்ற மனித ஆற்றலும் கிடைக்கச் செய்து ஆயுஷ் சுகாதார சேவைகளை சிறப்பான முறையில் அணுகச் செய்யப்பட்டுள்ளது.

 

  1. ஆயுஷ் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் ஆயுஷ் கல்வி மேம்பாடு

iii. கடுமையான அமலாக்க நுணுக்கத்துடன் இணைந்து  தரமான ஆயுஷ் மருந்துகள் பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஆயுஷ் மருந்தகங்கள் மூலம் தரமான மருந்து கிடைப்பது மேம்படுத்தப்பட்டது

  1. யோகா மற்றும் நேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவம் நோய் தடுப்பு மருத்துவ முறையாக திகழ்வதற்கான அதிகரிக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் ஏற்பு
  2. அதிகரித்து வரும் மூலிகை மூலப் பொருட்களின் உள்நாட்டு தேவையை எதிர்கொள்ளவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும் ஆதரவு

பின்னணி:

நோய் நிவாரணம் மற்றும் நோய் தடுப்பு ஆகியவற்றின் இந்திய அறிவாற்றலின் புதையல்களான இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றின் மீது இந்தியாவின் ஈடிணையற்ற பாரம்பரியத்தை உருவாக்க தேசிய ஆயுஷ் இயக்கம் விரும்புகிறது. இந்தியாவின் மருத்துவ முறைகளில் உள்ள நேர்மறையான சிறப்பம்சங்களான பரவல், இணக்கம், அணுகத்தக்கது, குறைந்த விலை ஆகியவை அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது. இதன் குறைந்த செலவு, மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார மதிப்பு, ஆகியவை நமது பெரும்பாலான மக்களுக்கு தேவையான சுகாதார பராமரிப்பை இது அளிக்கும்.

*****