மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதாக திரு மோடி குறிப்பிட்டார். “இது நமது கலாச்சாரத்தின் விவசாய மரபுகளில் ஆழமாக வேரூன்றிய, நன்றியுணர்வு, நிறைவு மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் கொண்டாட்டமாகும்” என்று பிரதமர் திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“எனது சக அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடந்த சங்கராந்தி மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டேன். ஒரு சிறந்த கலாச்சார நிகழ்ச்சியையும் கண்டேன்.
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். இது நன்றியுணர்வு, நிறைவு மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் கொண்டாட்டமாகும், இது நமது கலாச்சாரத்தின் விவசாய மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
அனைவருக்கும் இனிய சங்கராந்தி மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். அனைவரும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளமான அறுவடைக் காலத்தைப் பெற்றிட வாழ்த்துகிறேன்.”
@kishanreddybjp
*****
RB/DL
Attended Sankranti and Pongal celebrations at the residence of my ministerial colleague, Shri G. Kishan Reddy Garu. Also witnessed an excellent cultural programme.
— Narendra Modi (@narendramodi) January 13, 2025
People across India celebrate Sankranti and Pongal with great fervour. It is a celebration of gratitude, abundance… pic.twitter.com/avPKmFP1oU
Here are some more pictures from the Sankranti programme. Also lit the Bhogi fire. pic.twitter.com/lmD2m7vqE9
— Narendra Modi (@narendramodi) January 13, 2025