Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்தியப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்ற டாக்டர் மோகன் யாதவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

மத்தியப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்ற டாக்டர் மோகன் யாதவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


மத்தியப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள டாக்டர் மோகன் யாதவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுள்ள திரு ஜெகதீஷ் தியோரா, திரு ராஜேந்திர சுக்லா ஆகியோருக்கும் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“நாட்டின் இதயப் பகுதியான மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள டாக்டர் மோகன் யாதவுக்கும், துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள திரு ஜெகதீஷ் தியோரா மற்றும் திரு ராஜேந்திர சுக்லாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் தலைமையின் கீழ், மாநிலத்தில் உள்ள இரட்டை என்ஜின் அரசுகள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்  செயல்படும் என்றும், வளர்ச்சியின் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்கும் என்றும் நான் நம்புகிறேன். உங்கள் வாழ்க்கையை எளிதாக்க பிஜேபி அரசு எல்லாவித முயற்சிகளையும் செய்யும் என்று இந்த சந்தர்ப்பத்தில் இங்குள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன். “

***

ANU/SMB/BS/RS/KPG