Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு


மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

பாதுகாப்புப் படைத்  தளபதிகளின் மூன்று நாள் மாநாட்டின் போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு  பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன, இதில் ஆயுதப்படைகள் இணைந்து செயல்படுதல் முக்கியமானதாகும். தற்சார்பை அடைவதற்காக ஆயுதப் படைகளின் தயார் நிலை, பாதுகாப்பு சூழல் அமைப்பில் முன்னேற்றம் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த மாநாட்டில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில்  ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த வீரர்கள், மாலுமிகள் பங்கேற்றனர்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு ;

‘’இன்று போபாலில், ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாட்டில் பங்கேற்றேன். இந்தியாவின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விரிவான விவாதங்களை நடத்தினோம்’’.

**********

AD/PKV/DL