Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


ஹரஹர மகாதேவ்! ஜெய் ஸ்ரீ மஹாகல்! ஜெய் ஸ்ரீ மஹாகல்! மஹாகல் மகாதேவ்! மஹாகல் மகாபிரபோ! மஹாகல் மகாருத்ரா! மஹாகல் நமோஸ்துதே!

புனித பூமியான உஜ்ஜையினியில் நடைபெறும் இந்த மறக்க முடியாத நிகழ்ச்சியில் நாடு முழுவதுமிருந்து வந்துள்ள மரியாதைக்குரிய துறவிகளே, முனிவர்களே, மத்தியப்பிரதேச ஆளுநர் திரு.மங்குபாய் படேல் அவர்களே, சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா உய்கே அவர்களே, ஜார்க்கண்ட் ஆளுநர் திரு.ரமேஷ் பெயின்ஸ் அவர்களே, மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, மாநில அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, மஹாகல் பகவானின் அருளைப் பெற்றுள்ள பக்தர்களே, சகோதரிகளே, தாய்மார்களே.. ஜெய்மஹாகல்..!

உஜ்ஜைனியின் இந்த ஆற்றலும்.. உற்சாகமும்.. அவந்திகாவின் இந்த ஒளியும்.. மகிமையும்.. பேரின்பமும்.. மஹாகலின் இந்த பெருமையும்.. சிறப்பும்..! ‘மஹாகல் லோக்’ என்பது வழக்கமான ஒன்று இல்லை என்பதை காட்டுகின்றன. இறைவன் சங்கரின் அருளில் சாதாரணமானது ஏதுமில்லை. எல்லாமே இயற்கைக்கு அப்பாற்பட்டது மற்றும் அசாதாரணமானது. இது மறக்க முடியாத, நம்ப முடியாத தருணம். மஹாகல் நமது துறவறம் மற்றும் நம்பிக்கையில் மகிழ்ச்சியடையும்போது, இத்தகைய பிரம்மாண்டமான வடிவங்கள் அவரது ஆசீர்வாதத்தால் உருவாக்கப்படுகின்றன. இதை நாம் இன்று அனுபவிக்க முடியும்.

நண்பர்களே..!

உஜ்ஜைனியின் மஹாகல் நகரம் ‘பேரழிவிலிருந்து காக்கும் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது மஹாகல் நகரம் பேரழிவிலிருந்து விடுபட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான இந்தியாவின் புவியியல் அமைப்பு தற்போது இருப்பது போலன்றி, மாறுபட்டிருந்தது. அப்போது உஜ்ஜைனி இந்தியாவில் மையத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, உஜ்ஜைனி இந்தியாவின் முக்கிய நகரமாக மட்டுமல்லாமல், இந்தியாவின் ஆன்மாவின் முக்கிய நகரமாகவும் விளங்கியுள்ளது. இந்நகரம் ஏழு புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

உஜ்ஜைனியின் ஒவ்வொரு கணமும் வரலாற்றில் திளைத்துள்ளது. ஒவ்வொரு துகளிலும் ஆன்மீகம் நிறைந்துள்ளது. ஒவ்வொரு மூலையிலும் தெய்வீக ஆற்றல் நிரம்பியுள்ளது. காலசுழற்சியின் 84 கல்பங்களை குறிக்கும் விதமாக 84 சிவலிங்கங்கள் உள்ளன. 4 மகாவீரர்கள், 6 விநாயகர்கள், 8 பைரவர்கள், அஷ்டமாத்ரிகைகள், 9 நவகிரகங்கள், 10 விஷ்ணுக்கள், 11 ருத்ரர்கள், 12 ஆதித்யர்கள், 24 தேவிகள், 84 தீர்த்தர்கள் உள்ளனர்.  அதன் மையத்தில் ராஜாதிராஜ காலாதிராஜ மஹாகல் உள்ளது. ஒரு வகையில், நமது முழு பிரபஞ்சத்தின் முழு ஆற்றலும் நமது முனிவர்களால் உஜ்ஜைனியில் நிறுவப்பட்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே..

இதுபோன்ற புனித யாத்திரை தலங்கள் பல நூற்றாண்டுகளாக நமது தேசத்திற்கு வலிமையையும், பல செய்திகளையும் அளித்துள்ளது. காசி போன்ற புனித தலங்கள் மதத்துடன், அறிவு, தத்துவம் மற்றும் கலைகளின் தலைநகரமாக இருக்கிறது. உஜ்ஜைனி போன்ற இடங்கள் வானியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கிய இடமாக விளங்குகிறது. புதிய இந்தியா அதன் பண்டைய விழுமியங்களுடன் முன்னோக்கி செல்லும்போது, நம்பிக்கையுடன் இணைந்த அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகளின் பாரம்பரியத்தையும் புதுப்பிக்கிறது. இந்தியா தற்போது வானியல் துறையில் பிற நாடுகளுடன் போட்டியிடுகிறது. பிற நாடுகளின் செயற்கைக் கோள்களையும் இந்தியா விண்ணில் செலுத்துகிறது. சந்திரயான் மற்றும் ககன்யான் போன்ற திட்டங்கள் மூலம் இந்தியாவும் விண்ணில் புதிய எச்சத்தை தொட தயாராக உள்ளது. இது இந்தியாவுக்கு ஒரு புதிய உச்சத்தை அளிக்கும்.

**************

KG/KA/IDS