Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்தியப் பிரதேசம் சேஹுரில் நடந்த கிசான் கல்யான் மேளாவில் பிரதமர் உரை. பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கான விதிமுறைகள் வெளியீடு.


பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை மத்தியப் பிரதேசத்தில் நடைபெற உள்ள கிசான் கல்யான் மேளாவில் கலந்து கொண்டு, விவசாயத் துறைக்காகவும், விவசாயிகள் நலனுக்காகவும் அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து பேச உள்ளார்.

பயிர் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள மிகச் சிறந்த திட்டமான பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கான விதிமுறைகளையும் பிரதமர் அறிவிக்கிறார்.

வரக்கூடிய பயிர் காலத்தில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். முன் பருவ (கரீப்) கால பயிர்களுக்கு 2 சதவிகிதமும், (ரபி) பருவ கால பயிர்களுக்கு 1.5 சதவிகிதமும் காப்பீட்டுத் தொகை செலுத்தினால் போதுமானது. வணிக பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஆண்டுதோறும் 5 சதவிகிதம் காப்பீடு செலுத்த வேண்டும்.

இத்திட்டத்துக்கான அரசு மானியத்துக்கு உச்சவரம்பு கிடையாது. காப்பீட்டுத் தொகைக்கு உச்சவரம்பு நிர்ணயித்து, அதனால் விவசாயிகளுக்கு குறைந்த தொகை வழங்கப்பட்டு வந்த வழக்கம், நிறுத்தப்பட்டுள்ளது. காப்பீடு செய்த முழுமையான தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

மண் வளப் பாதுகாப்பு அட்டைகள், பயிர் காப்பீடு தொகைகள் ஆகியவற்றையும் பிரதமர் வழங்குவார்.

*******