Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா பயனாளிகளுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா பயனாளிகளுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை


அனைவருக்கும் வணக்கம் !

மத்தியப் பிரதேச ஆளுநரும், பழங்குடியினர் நலனுக்காக தனது முழு வாழ்க்கையையும் செலவிட்ட திரு மங்குபாய் படேல் அவர்களே, மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங், மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ,க்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் இணைந்துள்ள மத்தியப் பிரதேச சகோதர, சகோதரிகளே! 

பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நடத்தப்படும் உணவு பொருட்கள் விநியோக நிகழ்ச்சிக்காக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இத்திட்டத்தின் கீ்ழ்சுமார் 5 கோடி பயனாளிகளுக்கு இலவச ரேஷன் கிடைக்க மிகப் பெரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டம் புதிதல்ல. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா தாக்குதல் ஏற்பட்டதில் இருந்து, 80 கோடிக்கும் மேற்பட்ட  மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. ஆனால், இது குறித்து ஏழை மக்கள் இடையே பேசும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. இன்று, மத்தியப் பிரதேச அரசு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. வெகு தொலைவில் இருந்தாலும், எனது சகோதர, சகோதரிகளை பார்த்து அவர்களின் ஆசிர்வாதத்தை என்னால் பெற முடிகிறது.  இதன் மூலம்தான், ஏழைகளுக்கு ஏதாவது தொடர்ந்து செய்யும் பலத்தை பெறுகிறேன்.  உங்கள் ஆசியிலிருந்து எனது பலத்தை பெறுகிறேன். இப்போது, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். கொரோனா நெருக்கடி நேரத்தில் அரசிடமிருந்து இலவச உணவு தானியங்கள் கிடைத்தது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகப் பெரிய நிவாரணமாக இருந்தது என்பதை அறிந்து கொண்டேன்.  அவர்களது பேச்சில் திருப்தி மற்றும் நம்பிக்கை இருந்தது.  ஆனால், தற்போது மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம், பல நண்பர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.  இந்த துயரமான நேரத்தில், மத்தியப் பிரதேசத்துக்கு மத்திய அரசும், ஒட்டு மொத்த நாடும் துணை நிற்கிறது.  முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.  தேசிய பேரிடர் நிவாரண குழுவினராக இருக்கட்டும், மத்தியப் படைகளாக இருக்கட்டும் அல்லது நமது விமானப்படையாக இருக்கட்டும், வெள்ள நிலவரத்தை எதிர்கொள்ள அனைத்து உதவிகளும் மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது.

சகோதர, சகோதரிகளே,

எந்தவொரு பேரிடரின் தாக்கமும் மிக நீண்டது. நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பேரிடர் நாட்டில் ஏற்பட்டுள்ளது.  கடந்தாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட கொடுமையான அனுபவம் போல், உலகில் எந்த நாடும் பெறவில்லை. கடந்தாண்டு தொடக்கத்தில் கொரோனா பரவ தொடங்கியபோது, உலகின் ஒட்டு மொத்த கவனமும், சுகாதார வசதிகளை நோக்கி திரும்பியது. ஒவ்வொருவரும், தங்களின் மருத்துவ வசதிகளை பலப்படுத்துவதில் ஈடுபட்டனர். ஆனால், மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நமது நாட்டுக்குஏற்பட்ட சவால் மற்ற நாடுகளை விட பெரிது.  கொரோனா தடுப்புக்கும், சிகிச்சைக்கும், மருத்துவமனைகளை தயார்படுத்த வேண்டியிருந்தது. அதே நேரத்தில் இதன் காரணமாக ஏற்பட்ட மற்ற பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டியிருந்தது.  கொரோனாவை தடுக்க, உலகம் முழுவதும், பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் ஸ்தம்பித்தன, மக்களின் போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டது.  இந்த நடவடிக்கை, இந்தியாவில் அதிக நெருக்கடிகளை ஏற்படுத்தியது. ஆனால், இந்த சவாலை எதிர்கொள்ள, அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம். கோடிக்கணக்கான மக்களுக்கு, இலவச ரேஷனை நம்மால் கொடுக்க முடிந்தது. அதனால்தான் பட்டினி ஏற்படவில்லை.  பலர் வேலைக்காக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு செல்கின்றனர்.  அவர்களின் உணவு மற்றும் இருப்பிடத்துக்கான ஏற்பாடுகளையும் நாம் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பியபோது முறையான வேலைவாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது. இந்த சாவல்கள் நாட்டின் அனைத்து பகுதியிலும் இருந்தன. இது இந்தியாவின் போராட்டம் மற்றும் சவால்களை, உலகின் மற்ற நாடுகளை விட வலிமையானதாக்கியது.

ஆனால் நண்பர்களே,

எவ்வளவு பெரிய சவாலாக இருந்தாலும், நாடு இணைந்து செயல்படும்போது, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள் உள்ளன. பிரச்சினை தீர்க்கப்படுகிறது.

கொரோனாவால் எழுந்த நெருக்கடியை சமாளிக்க, இந்தியா தனது உத்தியில், ஏழைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்தது. பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனாவாக இருக்கட்டும் அல்லது கரிப் கல்யான் ரோஜர் யோஜனவாக இருக்கட்டும், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான ரேஷன் மற்றும் வேலைவாய்ப்புக்கு முதல் நாளில் இருந்து கவனம் செலுத்தப்பட்டது. கொரோனா காலத்தில், நாட்டில் 80 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில், கோதுமை, அரிசி, பருப்புகள், எரிவாயு சிலிண்டர்கள், 8 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. சுமார் 30,000 கோடி பணம், 20 கோடிக்கும் மேற்பட்ட சகோதரிகளுக்கு ஜன்தன் வங்கி கணக்கு மூலம் நேரடியாக அனுப்பப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வங்கி கணக்குகளிலும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. இரண்டு நாள் கழித்து, ஆகஸ்ட் 9ம் தேதி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், சுமார் 10 முதல் 11 கோடி விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படவுள்ளது.

நண்பர்களே,

இந்த ஏற்பாடுகளுடன், இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த தடுப்பூசிகள் பயனுள்ளவை மற்றும் பாதுகாப்பானவை. 50 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற மாபெரும் இலக்கை இந்தியா நேற்று கடந்து விட்டது. இந்தியாவில் ஒரு வாரத்தில் செலுத்தப்படும் தடுப்பூசி, உலகின் பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமானது. இதுதான் தற்சார்பு இந்தியாவின் புதிய ஆற்றல். முன்பு, பல நாடுகளை விட நாம் பின்தங்கியிருந்தோம். இன்று, பல நாடுகளைவிட முன்னேறிய நிலையில் உள்ளோம். விரைவில், நாம் தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

நண்பர்களே,

கொரோனா காரணமாக ஏற்பட்ட பல பிரச்சினைகளை ஒரே நேரத்தில் சமாளிப்பது, இந்தியாவின் பலத்தை காட்டுகிறது. ஒரேநாடு, ஒரே ரேஷன் கார்டு வசதி, இதர மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.  பெரிய நகரங்களில் நியாயமான வாடகை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அப்போதுதான், சேரிகளில் தொழிலாளர்கள் வசிக்க வேண்டிய நிலை ஏற்படாது. பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், வங்கிகளில் இருந்து எளிதான கடன்களை, நடைபாதை வியாபாரிகளுக்கு கிடைக்கிறது. அதனால், அவர்களால் தங்கள் தொழிலை தொடர முடியும்.  நமது கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகள், வேலைவாய்ப்புக்கு மிகப் பெரிய ஆதாரமாக இருக்கின்றன. ஆகையால், விரைவான கட்டமைப்பு திட்டங்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன.

நண்பர்களே,

உலகம் முழுவதும் உள்ள வாழ்வாதார நெருக்கடியில், இந்தியாவில் குறைந்தபட்ச இழப்பு இருப்பது தொடர்ந்து உறுதி செய்யப்படுகிறது. கடந்தாண்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, இவை தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளன. சிறு மற்றும் குறு தொழில்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அப்போதுதான், அவர்களால் தங்கள் தொழிலை தொடர முடியும்.  வேளாண் மற்றும் அது சார்ந்த தொழில்கள் தொடர்ந்து சுமூகமாக நடைபெறுவதை அரசு உறுதி செய்தது. விவசாயிகளுக்கு உதவ புத்தாக்க தீர்வுகளை நாங்கள் கொண்டு வந்தோம். இது தொடர்பாக மத்தியப் பிரதேசமும் சிறப்பான பணியை செய்தது. மத்தியப் பிரதேச விவசாயிகள் உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்தனர். இவை குறநை்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ப்படுவதை அரசும் உறுதி செய்தது. 17 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து கோதுமை மத்திய அரசு கொள்முதல் செய்தது. இதற்காக அவர்களின் வங்கி கணக்கில் ரூ.25,000 கோடிக்கு  மேற்பட்ட நிதியை  நேரடியாக செலுத்தியது.

 

சகோதர, சகோதரிகளே

இரட்டை இன்ஜின் அரசின் மிகப் பெரிய சாதகம், மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு விரைவாக அமல்படுத்தியது தான். மத்தியப் பிரதேசத்தில் திறன்மேம்பாடு, மருத்துவமனை கட்டமைப்பு, டிஜிட்டல் கட்டமைப்பு, ரயில் ரோடு இணைப்பு போன்ற பணிகள் வேகமாக நடக்கின்றன.  திரு. சிவராஜ் சிங் சவுகான் தலைமையின் கீழ்பிமாரு மாநிலம் என்ற அடையாளத்தை  வெகுநாட்களுக்கு முன்பே விட்டுவிட்டது. இல்லையென்றால், மத்தியப் பிரதேச ரோடுகளின் நிலை எனக்கு ஞாபகம் உள்ளது.  மிகப் பெரிய ஊழல்கள் நடந்ததாக செய்தி வெளியாகும். இன்று மத்தியப் பிரதேச நகரங்கள், சுத்தம் மற்றும் மேம்பாட்டில் புதிய முன்னுதாரணங்களை ஏற்படுத்தி வருகின்றன. 

சகோதர மற்றும் சகோதரிகளே,

இன்று, அரசின் திட்டங்கள் வேகமாக அமல்படுத்தப்படுவதற்கு, அரசின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் காரணம்.  முந்தைய அரசு முறையில், விலகல் இருந்தது. ஏழைகள் பற்றி கேள்விகள் கேட்டு, அவர்களை பதில் அளித்தும் வந்தனர். பயன்கள் யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை முன்பு இல்லை.  ஏழைகளுக்கு ரோடு எதற்கு, அவர்களுக்கு முதலில் தேவை உணவு என சிலர் நினைத்தனர்.  இது போன்ற கேள்விகளால், பல தசாப்தங்களாக, ஏழைகளுக்கு எந்த வசதியும் கிடைக்காமல் இருந்தன.   ஏழைகளுக்கு ரோடுகள், எரிவாயு, மின்சாரம், கான்கிரீட் வீடு, வங்கி கணக்கு, குடிநீர் வசதி கிடைக்கவில்லை.  இதனால் பல தசாப்தங்களாக, ஏழைகள் அடிப்படை வசதியின்றி இருந்தனர். சிறு தேவைகளுக்காக, வாழ்க்கை முழுவதும் போராடினர். இந்த நிலையை நாம் எவ்வாறு அழைக்கலாம்?   அவர்கள் ஏழை என்ற வார்த்தையை ஒரு நாளைக்கு 100 முறை கூறுவர், ஏழைகளுக்காக பாட்டு பாடுவர். இதுதான் அவர்களின் நடவடிக்கை! இந்த விஷயங்கள்தான் நடிப்பு என கூறப்படுகிறது.  வசதிகளை அளிக்கமாட்டார்கள் ஆனால் இரக்கப்படுவார்கள்.  ஆனால், நாங்கள், உங்களிடமிருந்து அடிதட்டில் இருந்து வந்துள்ளோம். உங்களின் மகிழ்ச்சி மற்றும் வருத்தங்களை நாங்கள் நன்றாக அனுபவித்துள்ளோம். அதனால், நாங்கள் உங்களுக்காக வித்தியாசமாக செயல்படுகிறோம். ஏழைகளை வலுப்படுத்த, அவர்களுக்கு உண்மையான அதிகாரம் அளிக்க, கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் பல முயற்சிகளை எடுத்துள்ளோம்.  இன்று, நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ரோடுகள் போடப்பட்டுள்ளன. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயிகளால் சந்தைக்கு செல்ல முடிகிறது, ஏழைகளால் மருத்துவமனைக்கு செல்ல முடிகிறது. ஜன் தன் கணக்கு மூலம், வங்கிகளுடன் ஏழைகள் இணைந்துள்ளனர். இன்று அவர்கள் பயன்களை நேரடியாக பெறுகின்றனர். இடைத்தரகர் இன்றி கடன்களை எளிதாக பெறுகின்றனர். கான்கிரீட் வீடுகள், மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை ஆகியவை ஏழைகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளன. அவமானம் மற்றும் கஷ்டங்களில் இருந்து அவர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.

அதேபோல், சுயவேலை செய்யும் கோடிக்கணக்கானோர், முத்ரான கடன்கள் மூலம் தொழில் செய்கின்றனர் மற்றும் பிறருக்கும் அவர்கள் வேலைவாய்ப்பு அளிக்கின்றனர்.

நண்பர்களே,

டிஜிட்டல் இந்தியா, மலிவான விலையில் இணையதள சேவை போன்றவை ஏழைகளுக்கு முக்கியம் அல்ல என்று கூறிவந்தவர்கள், இன்று டிஜிட்டல் இந்தியாவின் உண்மையான சக்தியை அனுபவிக்கின்றனர்.

சகோதர, சகோதரிகளே,

கிராமங்கள், ஏழைகள் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காக, மற்றொரு மிகப் பெரிய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரம், நமது கைத்தொழில்கள், கைத்தறி ஆகியவற்றை  ஊக்குவிக்கிறது . உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்த பிரச்சாரம்.  அந்த உணர்வுடன், நாடு தேசிய கைத்தறி தினத்தை இன்று கொண்டாடுகிறது. சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை நாம் கொண்டாடும்போது, ஆகஸ்ட் 7ம் தேதியும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கிய தினம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் இருந்து நாம் உத்வேகம் பெற்று, ஆகஸ்ட் 7ம் தேதி கைத்தறிக்கு அர்பணிக்கப்படுகிறது.  இந்த நாள், நம் கைவினை கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் மற்றும் அவர்களின் தயாரிப்புகளுக்கு உலகளாவிய தளத்தை அளிக்கும் நாளாகும்.

சகோதர, சகோதரிகளே,

இன்று நாம், நாட்டின் அம்ரித் மகோத்சவத்தை கொண்டாடும்போது, இந்த கைத்தறி தினமும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.  நமது சுதந்திர போராட்டத்தில் ராட்டை மற்றும் காதியின் மிகச் சிறந்த பங்களிப்பை நாம் அறிவோம்.  ஆண்டாண்டு காலமாக, காதிக்கு நாடு மதிப்பளித்து வருகிறது.  ஒருகாலத்தில் மறக்கப்பட்ட காதி, தற்போது புதிய பிராண்டாக மாறியுள்ளது.  தற்போது, நூாற்றாண்டு சுதந்திரத்தை நோக்கிய புதிய பயணத்தில் இருக்கிறோம். நாம் காதியின் உணர்வை வலுப்படுத்த வேண்டும்.  தற்சார்பு இந்தியாவுக்காக, உள்ளூர் தயாரிப்புக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்.  காதி முதல் பட்டு வரை வளமான கைத்தறி பாரம்பரியத்தை மத்தியப் பிரதேசம் கொண்டுள்ளது.  வரும் விழாக்காலங்களில், நாம் சில கைத்தறி தயாரிப்புகளை வாங்கி, கைவினை பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என நான் உங்கள் அனைவைரையும் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பண்டிககைளின் உற்சாகத்துக்கு நடுவே, கொரோனாவை மறக்க வேண்டாம் என நான் வேண்டிக் கொள்கிறேன்.  கொரோனா  மூன்றாவது அலையை நாம் நிறுத்த வேண்டும். இதை உறுதி செய்ய, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். முகக்கவசங்கள், தடுப்பூசிகள் மற்றும் சமூக இடைவெளி மிக முக்கியம்.  ஆரோக்கியமான மற்றும் வளமான இந்தியாவுக்கு நாம் உறுதி ஏற்க வேண்டும்.  மீண்டும், உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  இன்று கோடிக்கணக்கான மக்கள், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 25,000க்கு  மேற்பட்ட ரேஷன் கடைகளில் கூடியுள்ளீர்கள்.  உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.  இந்த நெருக்கடியில் இருந்து நாம் வெளிவருவோம் என நான் உறுதி அளிக்கிறேன். ஒன்றாக இணைந்து, நாம் எல்லோரையும் காப்பாற்றுவோம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி வெற்றியை உறுதி செய்வோம். உங்களுக்கு வாழ்த்துகள். நன்றி!

*******************