மத்தியப்பிரதேச மாநிலம் ரிவாவில் தேசிய பஞ்சாயத்து தின விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ரூ. 17 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவுற்ற திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் உள்ள 30 லட்சம் பஞ்சாயத்து அமைப்புகளின் பிரதிநிதிகள், மெய்நிகர் முறையில் பங்கேற்று இருப்பது இந்திய ஜனநாயகத்தின் துணிவை வெளிப்படுத்துவதாக கூறினார். விழாவில் பங்கேற்றுள்ள அனைவரும் நாட்டு மக்களுக்கு சேவைபுரிய வேண்டும் என்ற பொதுவான இலக்கை நோக்கி வெவ்வேறு விதமான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதை நினைவு கூர்ந்தார். மத்திய அரசின் திட்டங்களை கிராமப்புற ஏழை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை பஞ்சாயத்து அமைப்புகள் முழு அர்ப்பணிப்போடு செய்வது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
பஞ்சாயத்து அளவிலான பொது கொள்முதலுக்கான இ-கிராம் ஸ்வராஜ் மற்றும் ஜெம் இணையதளம் குறித்து பேசிய பிரதமர், இவ்விரண்டும் பஞ்சாயத்து அமைப்புகளின் பணியை எளிமைப் படுத்தியிருப்பதாகக் கூறினார். 35 லட்சம் ஸ்வமித்வா சொத்து அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதையும், மத்தியப் பிரதேசத்தின் மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு ரயில்வே, வீட்டுவசதி, நீர் மற்றும் வேலைவாய்ப்புக்காக 17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
விடுதலையின் அமிர்தப் பெருவிழா காலத்தில், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்ற, நம் ஒவ்வொரு குடிமகனும் ஒட்டுமொத்த முழு அர்ப்பணிப்புடன் இரவு-பகலாக உழைத்து வருவதாக குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதைக் காட்டிலும், இந்தியாவின் கிராமங்களில் உள்ள சமூக, பொருளாதார மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளை மேம்படுத்துவது முக்கியம் என்று தெரிவித்த பிரதமர், இதற்காகவே மத்திய அரசு அயராது பாடுபட்டு வருவதாக கூறினார். அதே நேரத்தில் முந்தைய அரசுகள், பஞ்சாயத்து அமைப்புகள் மீது குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்ததையும் நினைவு கூர்ந்தார். நாட்டின் வளர்ச்சிக்காக, 2014-ம் ஆண்டிற்கு முன்பு ரூ.70 ஆயிரம் கோடி ரூபாயாக ஒதுக்கிய தொகை, 2014-ம் ஆண்டுக்கு பிறகு 2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில் வெறும் 6 ஆயிரம் பஞ்சாயத்து இல்லங்கள் மட்டுமே கட்டப்பட்ட நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் தமது அரசு 30 ஆயிரம் பஞ்சாயத்து இல்லங்களை கட்டி இருப்பதையும் சுட்டிக்காட்டினார். முந்தைய ஆட்சியில் 70க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை மூலம் இணைக்கப்பட்டிருந்த நிலையில், தமது அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தற்போது வரை 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் கண்ணாடி இழை இணைப்பு கொண்டு வரப்பட்டு இருந்ததையும் குறிப்பிட்டார். சுதந்திரத்திற்கு பிறகு ஆட்சி வகித்த முந்தைய அரசுகள் பஞ்சாயத்துக்களின் மீது பெரிய நம்பிக்கை கொண்டு இருக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். ஆனால், இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்ற தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வரிகளை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், காந்தியின் கொள்கைகளை முந்தைய அரசுகள் மதிக்கத் தவறியதாலேயே பல ஆண்டுகளாக பஞ்சாயத்து அமைப்புகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறினார். ஆனால், தற்போது பஞ்சாயத்து அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சியின் உயிரோட்டத்திற்கான ஒன்றாக திகழ்வதாகவும், கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத்திட்டம், பஞ்சாயத்து அமைப்புகள் திறம்பட பணியாற்ற உதவுவதாகவும் குறிப்பிட்டார்.
நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையேயான இடைவெளியை இணைக்கும் பாலமாக, அரசு அயராது பாடுபட்டு வருவதாகக் கூறிய அவர், இன்றைய டிஜிட்டல் புரட்சி யுகத்தில் கிராமப் பஞ்சாயத்துக்கள் பொலிவுபெற்று வருவதையும் சுட்டிக்காட்டினார். பொது கொள்முதலுக்கான ஜெம் எனப்படும் அரசு இ-சந்தை இணையதளம் வாயிலாக பஞ்சாயத்து அமைப்புகள் வெளிப்படைத் தன்மையுடன் கொள்முதலை எளிமையாக்கி இருப்பதுடன், இதன் வாயிலாக உள்ளூர் குடிசைத் தொழில் விற்பனை அதிகரித்து இருப்பதாகவும் கூறினார்.
பிரதமரின் ஸ்வமித்வா திட்டத்தில் தொழில் நுட்பங்களின் பயன்பாடு, சொத்து விவகாரங்களில் கிராமப்புற மக்களின் உரிமையை நிலைநாட்ட உதவுவதுடன், சொத்து வழக்குகளை குறைக்கவும் துணை நிற்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், எந்த பாகுபாடும் இல்லாமல் நில ஆவணங்களை உறுதி செய்வதற்கு ட்ரோன் தொழில் நுட்பங்கள் பெரிதும் கைகொடுப்பதாகும். 75 ஆயிரம் கிராமங்களில் சொத்து அட்டை வழங்குவதற்கான பணி நிறைவடைந்து இருப்பதாகக் கூறிய பிரதமர், இந்த பாதையில் மத்தியப்பிரதேச அரசு திறம்பட பணியாற்றி வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவின் வளர்ச்சித்திட்டங்களில் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் மாறுபட்ட எண்ணங்களை கொண்டிருந்ததை நினைவு கூர்ந்த பிரதமர், சுதந்திரத்திற்கு பிறகு, கிராமப்புற பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளை புறக்கணித்ததன் மூலம், அந்த மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை ஆளும் கட்சிகள் இழந்து விட்டன என்றும் குற்றம் சாட்டினார்.
மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் கிராமங்களில் வசித்து வரும் நிலையில், கிராமங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டினால் நாடு முன்னேற்றம் அடையாது என்று அறிவுறுத்திய பிரதமர், 2014-ம் ஆண்டுக்கு பிறகு கிராமப்புற பொருளாதாரம், கிராம மக்களின் வசதி வாயப்புகள், கிராம மக்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதையும் சுட்டிகாட்டினார். உஜ்வாலா, பிரதமரின் வீட்டு வசதித் திட்டங்கள் கிராம மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர், வீட்டு வசதித்திட்டத்தில் 4.5 கோடி வீடுகள் கட்டுப்பட்டு இருப்பதாகவும், இதில் 3 லட்சம் வீடுகள் கிராமப்பகுதிகளில் கட்டப்பட்டதாகவும், குறிப்பாக, குடும்பத்தலைவிகள் பெயரில் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், கட்டப்படும் ஒவ்வொரு வீடும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலான செலவில் கட்டப்படுவதை குறிப்பிட்ட பிரதமர், இதன் மூலம் கோடிக்கணக்கான மகளிரின் வாழ்க்கையை அரசு மாற்றியமைத்து அவர்களை லட்சாதிபதி பெண்களாக மாற்றியிருப்பதாக கூறினார். இன்று 4 லட்சம் குடும்பத்தினர் பாதுகாப்பான புதிய வீடுகளில் குடியேறுவதற்கான புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதாகவும் இந்த வீடுகளின் உரிமையாளர்களாக உள்ள சகோதரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் பிரதமர் கூறினார்.
பிரதமரின் சௌபாக்கியா திட்டம் குறித்து பேசிய அவர், இத்திட்டத்தின் கீழ் இரண்டரை கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவற்றில் பெரும்பாலான வீடுகள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவை என்றும் அவர் கூறினார். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 9 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் முன்பு 13 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு இருந்ததாகவும் தற்போது சுமார் 60 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வங்கிகளை எளிதில் அணுகுதல் மற்றும் வங்கிக் கணக்குகளின் அவசியம் குறித்து பேசிய பிரதமர், முன்பு பெரும்பாலான கிராம மக்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை எனவும் அவர்களுக்கு வங்கி தொடர்பான எந்த சேவையும் கிடைக்காமல் இருந்ததெனவும் கூறினார். இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதிப்பலன்கள் அபகரிக்கப்படும் சூழல் நிலவியதாக அவர் குறிப்பிட்டார். தற்போது ஜன்தன் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து எடுத்துரைத்த அவர், இதன் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் 40 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அஞ்சலகங்கள் மூலமான, அஞ்சலக வங்கிச் சேவையும் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். வங்கிச் சேவைகள் தொடர்பாக வழிகாட்டு உதவிகளை வழங்கும் நபர்கள் கிராமப்புற மக்களுக்கு விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகள் தொடர்பாகவும் வழிகாட்டு தகவல்களை வழங்குவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முந்தைய அரசுகள் இந்தியாவின் கிராமங்களுக்கு அநீதி இழைத்தாக கூறிய பிரதமர், கிராமப்புறங்கள் என்பதால் வாக்கு வங்கிகளாகக் கருதப்படவில்லை. கிராமங்களுக்கு நிதி ஒதுக்குவது தவிர்க்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும். திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டு கிராமங்களின் வளர்ச்சிக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று கூறினார். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பல லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருந்து வந்த நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற 1 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுவதாக பிரதமர் எடுத்துரைத்தார். மேலும் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என அவர் கூறினார்.
பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அரசாங்கம் நேரடியாக சுமார் 2.5 லட்சம் கோடிகளை செலுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இத்திட்டத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் சுமார் 90 லட்சம் விவசாயிகள் 18,500 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக அவர் கூறினார். ரேவா பகுதியில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதையடுத்து கூடுதலாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கிராமங்களைச் சென்றடைந்துள்ளதாக அவர் கூறினார். கொவிட் காலத்தில், அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக ஏழைகளுக்கு ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான உணவு தானியங்களை இலவசமாக வழங்கியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
முத்ரா வங்கிக்கடன் திட்டத்தைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இத்திட்டத்தின் கீழ், ரூ.24 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டு, கிராமங்களில் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலை வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக, பெண்கள் அதிக எண்ணிக்கையில் பயன் பெற்றிருப்பதாகவும் கிராமங்களில் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்று பிரதமர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட மொத்தம் 9 கோடி பெண்கள் சுயஉதவி குழுக்களில் சேர்ந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு சுயஉதவிக்குழுவுக்கும் வங்கி உத்தரவாதம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுவதாகவும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இப்போது பெண்கள் பல சிறுதொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்ட பிரதமர், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசுகளால் அமைக்கப்பட்டுள்ள மகளிர் குழுக்கள் பற்றி குறிப்பிட்டார். மத்திய பிரதேச மாநிலத்தின் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், கடந்த ஊராட்சி (பஞ்சாயத்து) தேர்தலில் சுயஉதவி குழுக்களுடன் தொடர்புடைய சுமார் 17,000 பெண்கள் ஊராட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள ‘சமவேஷி அபியான்’ எனப்படும் அனைவரையும் உள்ளடக்கிய திட்டம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், அனைவருக்குமான வளர்ச்சியின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைவதற்கான வலுவான முயற்சியாக இது அமையும் என்றார். ஒவ்வொரு ஊராட்சியும், ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு பிரதிநிதியும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வளர்ந்த இந்தியாவுக்காக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அனைத்து அடிப்படை வசதிகளும் பயனாளிகளை 100 சதவீதம் அளவுக்கு முழுமையாகவும், விரைவாகவும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் சென்றடையும் போது மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகும் என்று பிரதமர் கூறினார்.
புதிய விவசாய முறைகள் குறித்து ஊராட்சி நிர்வாகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். குறிப்பாக இயற்கை விவசாயத்தைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோரை ஊக்குவிக்கும் முன்முயற்சியில் ஊராட்சிகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்று அவர் கூறினார். வளர்ச்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடும்போது, நாட்டின் கூட்டு முயற்சிகள் வலுப்பெறும் என்று அவர் தெரிவித்தார். இது அமிர்தகாலத்தில் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான ஆற்றலாக மாறும் என பிரதமர் கூறினார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் பிரதமர் எடுத்துரைத்தார். இதில் சிந்த்வாரா – நைன்பூர் – மண்ட்லாஃபோர்ட் ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டு இருப்பதை குறித்து அவர் குறிப்பிட்டார். இத்திட்டம் இப்பகுதியிலிருந்து தில்லி-சென்னை மற்றும் ஹவுரா-மும்பைக்கான இணைப்பை மேலும் எளிதாக்கும் என அவர் கூறினார். அதே வேளையில் இப்பகுதி பழங்குடியின மக்களுக்கும் இது பெரிதும் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார். சிந்த்வாரா-நைன்பூருக்கு இன்று கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்ட புதிய ரயில்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். இது பல நகரங்கள் மற்றும் கிராமங்களை மாவட்ட தலைமையகமான சியோனி – சிந்த்வாராவுடன் நேரடியாக இணைக்கும் என அவர் தெரிவித்தார். மேலும் நாக்பூர் மற்றும் ஜபல்பூருக்குச் செல்வதும் மிகவும் எளிதாகும் என அவர் கூறினார். இப்பகுதியில் பலவகையான வனவிலங்குகள் அதிகம் உள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர், போக்குவரத்து இணைப்பை அதிகரிப்பதன் மூலம் சுற்றுலா மேம்படுவதோடு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்றார். இது இரட்டை இஞ்சின் அரசாங்கத்தின் வலிமை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை 100-வது அத்தியாயத்தை நிறைவு செய்யும் ‘மனதின் குரல் எனப்படும் நிகழ்ச்சியின் மீது மக்கள் காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பல பகுதிகளின் மத்தியப் பிரதேச மக்களின் பல்வேறு சாதனைகளை தாம் குறிப்பிட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 100-வது பகுதியை அனைவரும் தவறாமல் கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங், மத்திய அமைச்சர்கள் திரு ஃபகன் குலாஸ்தே, சாத்வி நிரஞ்சன் ஜோதி, திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்ற நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சபைகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது, ஊராட்சி அளவில் பொது கொள்முதல் செய்வதற்கான ஒருங்கிணைந்த இ கிராம ஸ்வராஜ் மற்றும் ஜெம் தளத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த ஒருங்கிணைப்பின் நோக்கம், இ கிராம ஸ்வராஜ் தளத்தை மேம்படுத்துவதன் மூலம், ஜெம் வழியாக ஊராட்சிகள் தங்கள் பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதை செயல்படுத்துவதாகும்.
அரசின் திட்டங்கள் நிறைவடைவதை உறுதி செய்வதில் மக்களின் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன், “வளர்ச்சியை நோக்கி எடுத்துவைக்கப்பட்ட முயற்சிகள்” என்ற இயக்கத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த இயக்கத்தின் கருப்பொருள் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கடைசி பயனாளியையும் அடைவதில் கவனம் செலுத்துவதாகும்.
சுமார் 35 லட்சம் ஸ்வமித்வா சொத்து அட்டைகளையும் பயனாளிகளுக்கு பிரதமர் வழங்கினார். இதன் பிறகு, இன்று அங்கு விநியோகிக்கப்பட்டவை உட்பட, நாட்டில் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் மொத்தம் சுமார் 1.25 கோடி சொத்து அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை அடைவதற்கான திட்டத்தின் ஒரு கட்டமாக, பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 4 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கும் கிரகப்பிரவேசம் எனப்படும் ‘புதுமனை புகுவிழா’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்.
ரூ.2300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மத்திய பிரதேசத்தில் அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்களில், 100 சதவீத ரயில் மின்மயமாக்கல், பல்வேறு இரட்டைப் பாதை திட்டங்கள், அகலப்பாதை திட்டங்கள், மின்மயமாக்கல் திட்டங்கள் அடங்கும். குவாலியர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார்.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், சுமார் ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
***
SM/PLM/RJ/ES/RS/RR
(Release ID: 1919142)
पंचायती राज संस्थाएं लोकतंत्र की भावना को बढ़ावा देने के साथ हमारे नागरिकों के विकास की आकांक्षाओं को पूरा करती हैं। https://t.co/WJVhhWnj36
— Narendra Modi (@narendramodi) April 24, 2023
देश की ढाई लाख से अधिक पंचायतों को, राष्ट्रीय पंचायती राज दिवस की बहुत-बहुत शुभकामनाएं: PM @narendramodi pic.twitter.com/srdROkwBdW
— PMO India (@PMOIndia) April 24, 2023
आजादी के इस अमृतकाल में, हम सभी देशवासियों ने विकसित भारत का सपना देखा है और इसे पूरा करने के लिए दिन रात मेहनत कर रहे हैं। pic.twitter.com/tyHuErJ10j
— PMO India (@PMOIndia) April 24, 2023
2014 के बाद से, देश ने अपनी पंचायतों के सशक्तिकरण का बीड़ा उठाया है और आज इसके परिणाम नजर आ रहे हैं। pic.twitter.com/NPv7TTTw5E
— PMO India (@PMOIndia) April 24, 2023
डिजिटल क्रांति के इस दौर में अब पंचायतों को भी स्मार्ट बनाया जा रहा है। pic.twitter.com/XKhh2XKN2l
— PMO India (@PMOIndia) April 24, 2023
देश के गावों को जब बैंकों की ताकत मिली है, तो खेती-किसानी से लेकर व्यापार कारोबार तक, सब में गांव के लोगों की मदद हो रही है। pic.twitter.com/jPYn6wifQA
— PMO India (@PMOIndia) April 24, 2023
विकसित भारत के लिए देश की हर पंचायत, हर संस्था, हर प्रतिनिधि, हर नागरिक को जुटना होगा। pic.twitter.com/UEK7dmhIGX
— PMO India (@PMOIndia) April 24, 2023
हमारी पंचायतें, प्राकृतिक खेती को लेकर जनजागरण अभियान चलाएं। pic.twitter.com/bmdW1L1rbt
— PMO India (@PMOIndia) April 24, 2023
आजादी के अमृतकाल में हम अपने गांवों की सामाजिक, आर्थिक और पंचायती व्यवस्था को हर तरह से सशक्त करने में जुटे हैं, ताकि विकसित भारत का सपना साकार हो सके। pic.twitter.com/xb7pGjX3r8
— Narendra Modi (@narendramodi) April 24, 2023
डिजिटल क्रांति के इस दौर में अब पंचायतों को भी स्मार्ट बनाया जा रहा है। आज जिस Integrated e-GramSwaraj और GeM Portal का शुभारंभ हुआ है, उससे पंचायतों के माध्यम से होने वाली खरीद की प्रक्रिया बेहद सरल, सुलभ और पारदर्शी बनेगी। pic.twitter.com/LBMoNwsAso
— Narendra Modi (@narendramodi) April 24, 2023
आजादी के बाद सबसे लंबे समय तक सरकार चलाने वाली कांग्रेस ने ग्रामीण क्षेत्रों के विकास को सबसे निचले पायदान पर रखा। लेकिन 2014 के बाद हमने जिस प्रकार गांव के लोगों के हितों को सर्वोच्च प्राथमिकता दी, आज उसके अनेक उदाहरण सामने हैं। pic.twitter.com/P478LIB6it
— Narendra Modi (@narendramodi) April 24, 2023
बीते 9 वर्षों में मध्य प्रदेश सहित देशभर के गांवों में महिला सशक्तिकरण और रोजगार-स्वरोजगार के लिए हमारी सरकार ने जो अभूतपूर्व कदम उठाए हैं, उनकी आज हर तरफ चर्चा हो रही है। pic.twitter.com/mZLf0yiwSB
— Narendra Modi (@narendramodi) April 24, 2023
प्राकृतिक खेती को लेकर आज देश में व्यापक स्तर पर प्रयास हो रहे हैं। इस सिलसिले में पंचायतों से मेरा एक आग्रह है… pic.twitter.com/KJY983BovU
— Narendra Modi (@narendramodi) April 24, 2023