Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மணிப்பூர் மாநிலம் நானி மாவட்டத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்


மணிப்பூர் மாநிலம் நானி மாவட்டத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“மணிப்பூர் மாநிலம் நானி மாவட்டத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களைக் குறித்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மணிப்பூர் அரசு செய்து வருகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

****

(Release ID: 1885553)

IR/RB/RR