வாழ்த்துக்கள்! சங்கை திருவிழாவைக் கொண்டாடுவதற்கு வெற்றிகரமான ஏற்பாட்டை செய்துள்ள மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் என் இதயபூர்வ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு சங்கைத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நிகழ்வுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக முதலமைச்சர் என். பைரேன் சிங் அவர்களுக்கும் அவருடைய அரசுக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே!
மணிப்பூர் மாநிலம் இயற்கை அழகுடன் கூடியதாகவும், சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டதாகவும் திகழ்கிறது. எனவே, ஒவ்வொருவரும் ஒருமுறையாவது இங்கு வருகை தர விரும்புகிறார்கள். ஒரே நூலில் கோர்க்கப்பட்ட பல்வேறு வகையிலான அணிகலன்களைக் கொண்ட அழகான மாலையாக மணிப்பூர் உள்ளது. இந்த அமிர்த காலத்தில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உத்வேகத்தோடு நாடு முன்னேறி வருகிறது. அதையொட்டி, ஒற்றுமைத் திருவிழா என்ற தலைப்பில் சங்கைத் திருவிழா வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நமக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் அதிக சக்தியை அளிக்கக் கூடும். சங்கை, மணிப்பூர் மாநில விலங்காக மட்டுமல்லாமல் இந்தியாவின் சமூக பாரம்பரியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது. அதனால்தான், இந்தியாவின் உயிரியல் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில், சிறந்த திருவிழாவாக சங்கைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இது இயற்கையுடன் இணைந்த இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ஒருங்கிணைப்பையும் கொண்டாடுகிறது.
சகோதர சகோதரிகளே,
தலைநகரத்தில் மட்டும் சங்கைத் திருவிழா கொண்டாட்டம் என்பது அல்லாமல் மாநிலம் முழுவதும் இது கொண்டாடப்பட்டு ஒற்றுமைத் திருவிழாவாக விளங்குகிறது. நாகாலாந்து எல்லை முதல் மியான்மர் எல்லை வரை 14 இடங்களில் இத்திருவிழாவின் கொண்டாட்டத்தைக் காணமுடிகிறது.
நண்பர்களே!
நூற்றாண்டுகால பாரம்பரிய திருவிழாக்கள் நம் நாட்டில் உள்ளன. இந்தத் திருவிழாக்கள் மூலம் நமது கலாச்சாரத்தை மேம்படுத்துவதோடு உள்ளூர் பொருளாதாரமும், சிறந்த வளர்ச்சியைப் பெறுகிறது. சங்கைத் திருவிழா போன்ற நிகழ்வுகள் முதலீ்ட்டாளர்களை வர்த்தகர்களையும் ஈர்க்கிறது. இந்த திருவிழா மூலம் எதிர்காலத்தில் மாநிலம் வளர்ச்சி அடையும் என்று நாம் நம்புகிறேன்..
இந்த உத்வேகத்தோடு அனைவருக்கும் மிக்க நன்றி!
**************
SRI/IR/KPG/IDS
Manipur is known for its vibrant culture. Best wishes on the occasion of Sangai Festival. https://t.co/OUwyw8T0hR
— Narendra Modi (@narendramodi) November 30, 2022