“மாற்றத்தை நோக்கி சீர்திருத்தம் காண்பதே எனது குறிக்கோள். எனது பதவிக் காலம் நிறைவடையும்போது, மக்கள் மாற்றத்தை உணர்ந்திருக்க வேண்டும். அதுதான் வெற்றி எனக் கருதுகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி “தி எகனாமிக்ஸ் டைம்ஸ்” நாளேட்டுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
“எகனாமிக்ஸ் டைம்ஸ்” உள்ளிட்ட சில பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “மத்திய மந்திரி சபை மாற்றம் என்பது அதன் விரிவாக்கமே தவிர, அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவதல்ல” என்றார்.
எகனாமிக்ஸ் டைம்ஸ் நாளேட்டின் எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கு, மின்னஞ்சல் மூலமாக பிரதமர் அளித்த பதிலில், “செயல்பாடுகளில் விரைவு, இலக்கு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதைத்தான் உத்தேசித்துள்ளோம்” என்றார். தனது நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் பெரிய யோசனைகளை அவர் விவரித்தார். “எங்களது அணுகுமுறையில் நாங்கள் இந்தியராக இருக்கிறோம். ஆனால், பார்வையில் உலகநோக்குடன் இருக்கிறோம்” என்றார் பிரதமர்.
“விமானநிலையங்களைக் கட்டுவதில் காட்டும் வேகத்தையும், கவனத்தையும் கழிவறைகளைக் கட்டுவதிலும் காட்டுவோம். கடல்வளப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் காட்டும் வேகத்தையும் கவனத்தையும் மீனவர் நலன்களிலும் காட்டுவோம்”
முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அரசியல் எதிர்ப்பு எழுவது குறித்த கேள்விகளுக்கு “எகனாமிக்ஸ் டைம்ஸ்” இதழுக்கு பிரதமர் பதிலளிக்கையில், “நான் நம்பிக்கைவாதி” என்றார். “மேலும், காலக்கெடுவை விட உயிர்நாடியான விஷயத்தில்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மீதான அரசியல் எதிர்ப்பு “தற்கொலை” செயல் போன்றது” என்று பிரதமர் கூறினார்.
“2019ம் ஆண்டு, தற்போதைய பதவிக் காலம் முடியும்போது, எதைச் சாதிப்பதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?” என்று “எகனாமிக்ஸ் டைம்ஸ்” நிருபர் கேட்டதற்கு, “வெளிப்படையாகச் சொன்னால், எனது பதவிக் காலம் 2019ம் ஆண்டு முடியும்போது, சில சாதனைகளை நிகழ்த்தியதாக மட்டுமே என்னால் கூறிக் கொள்ள முடியுமே தவிர, அதை வெற்றி என்று கருதமாட்டேன்” என்று மோடி பதிலளித்தார்.
“என்னைப் பொறுத்த மட்டில், நான் கூறிக்கொள்ளும் சில அல்லாமல், மக்கள் மாற்றத்தை உணர்ந்திருக்க வேண்டும் என்பது வெற்றி. அதுதான் சரியான அளவுகோல்”.
“எகனாமிக்ஸ் டைம்ஸ்” இதழிடம் பேசிய மோடி, மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதை ஆதரிக்கிறேன் என்றார். அப்போதுதான், “மாநிலங்களவையும் (ராஜ்யசபா) அதே நிலையை அடையும்”.
மாநில சட்டமன்றங்களில் அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் பலமே ராஜ்யசபாவில் அக்கட்சிகளின் பலத்தை முடிவு செய்வதால், எல்லாத் தேர்தல்களையும் ஒரே சமயம் நடத்தினால், அது மக்களின் எண்ணங்களைச் சீராகப் பிரதிபலிப்பதாக அமையும் என்பது பிரதமரின் கருத்தாகும்.
அரசியல் ரீதியில் இது குறிப்பிடத் தக்க பதிலாகும். காரணம், காங்கிரஸ் கட்சி, ராஜ்ய சபாவில் அதிக எண்ணிக்கையை வைத்துக் கொண்டு, ஜி.எஸ்.டி மசோதா மற்றும் பல முக்கிய முக்கிய மசோதாக்கள் நிறைவேறவிடாமல் இதுவரை கவிழ்த்துவந்தது.
நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றப் பேரவைகளுக்கும் ஒரே சமயம் தேர்தலை நடத்தவேண்டும் என்பதை பிரதமர் ஆதரிப்பது, பாரதீய ஜனதா கட்சி நீண்டகாலமாக முன்வைத்த யோசனையிலிருந்து உருவானது.
வாக்காளர்கள் மாற்றத்தை விரும்பி தேசிய அளவிலானதீர்ப்பு உண்மையானதாக அமையும்.
வாக்காளர்கள் தங்களது எல்லா பிரதிநிதிகளையும் ஒரே சமயத்தில் மாற்ற விரும்பினால், மக்கள் தீர்ப்பு “உண்மையானது” என அமையும் என்று அந்த யோசனை எடுத்துக் கூறுகிறது.
இந்த விஷயம் குறித்து “எகனாமிக்ஸ் டைம்ஸ்” இதழிடம் விவரித்த மோடி, “தேர்தல் நடக்கும்போது, அரசாங்கத்தின் முடங்கிப் போகிறது. அதனால்தான், சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றங்களுக்கும் ஒரே சமயம் தேர்தல் நடத்தவேண்டும் என்று பலர் கோரி வருகிறார்கள்” என்றார்.
மத்திய அமைச்சரவையின் மாற்றங்கள் குறித்து கேட்டதற்குப் பதிலளித்த பிரதமர், செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படும் செயல், “ஒரு விரிவாக்கமே, அமைச்சர் இலாகா மாற்றம் அல்ல” என்றார். விரிவாக்கம் என்பது, “இயற்கையானது, அமைச்சர் இலாகா மாற்றம் அல்ல” என்றார். விரிவாக்கம் என்பது (தனது பதவிக் காலத்தில்) “இயற்கையானது… மறு ஆய்வுக்கு இரண்டு ஆண்டு காலம் என்பது சரியானது”
மிக முக்கியமான ஜி.எஸ்.டி. மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது குறித்து, “எகனாமிக்ஸ் டைம்ஸ்” இதழின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், அது “எந்தக் கட்சி எதிர்த்தாலும் அது தற்கொலைக்கு சமமானது” என்றார்.
“எந்த அரசியல் கட்சியும் ஜி.எஸ்.டி மசோதாவை எதிர்த்து, தற்கொலை செய்து கொள்ளாது என்று நினைக்கிறேன். ஜி.எஸ்.டி மசோதா எப்போது நிறைவேறும் என்ற காலக்கெடு குறித்து கேட்டீர்கள். ஒரு நம்பிக்கைவாதி என்ற நிலையில், நான் காலக் கெடு நிர்ணயிப்பதை விட, தீர்வு காண்பதையே நம்புகிறேன்” என்று “எகனாமிக்ஸ் டைம்ஸ்” இதழிடம் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசிய பிரதம மந்திரி, மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சித் தலைமைக்கும் இடையில் தகவல் இடைவெளி இருக்கிறதா என்பதற்குக் கருத்து கூறுவதைத் தவிர்த்துவிட்டார்.
நாடாளுமன்றத்தின் இயக்கத்தில் அரசுக்குப் பெரிய பங்கு இருக்கிறது என்றார் அவர். ஆனால், ஆட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் “போதிய தகவல் பரிமாற்றம் உள்ளது” என வலியுறுத்தினார்.
“செயல்களில் நல்லுறவை மேற்கொள்ளத் தேவையான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு வந்தோம்” என்றார் மோடி.