இந்திய ஆட்சி பணி அலுவலர்கள் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்வதை தங்களின் முதல் முக்கிய கடமையாக கருத வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். 183 இந்திய சிவில் பணி பயிற்சி அதிகாரிகளும் மூன்று பூட்டான் சிவில் பணி அதிகாரிகளும் பிரதமரை இன்று சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பிரதமர் தெரிவித்த்தாவது:-
ஆங்கிலேயர் ஆட்சியின் போது அதிகாரிகள் அவர்கள் ஆட்சியை என்றும் நிலைத்திருக்கும் வகையில் பணிபுரிய வேண்டி இருந்த்து. ஆனால், சுதந்திர இந்தியாவில் நிர்வாகம் பொது மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பணிபுரிய வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் சாராம்சமாகும்.
புத்தரின் போதனைகளை குறிப்பிட்ட பிரதமர், பயிற்சி பெறும் அலுவலர்கள் தங்களுக்குள் உள்ள விளக்கை ஏற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இது அனைத்து மனிதர்களிடமும் உள்ள நல்லெண்ணங்களாகும். இது உங்களை உங்களின் பணியில் வழிநடத்தி செல்லும். நான் பதவியேற்றபின் மத்திய அரசின் செயலர்களை சந்தித்து அவர்கள் முதன்முதலில் பணிபுரிந்த இடத்திற்கு பயணம் செய்து என்ன மாற்றங்கள் வந்துள்ளன என்பதை கண்டறிய சொல்லி இருந்தேன். இந்திய ஆட்சி பணி அளிக்கும் நிரத்தர பணியில் நீங்கள் மனநிறைவு கொள்ள கூடாது. உங்கள் பணியை வைத்து நீங்கள் உங்களை மதிப்பிடக் கூடாது. ஏழைகளின் வாழ்க்கையில் நீங்கள் என்ன மாற்றம் கொண்டு வந்து இருக்கிறீர்கள் என்பதை கொண்டே நீங்கள் உங்களை மதிப்பிட வேண்டும். அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை இன்று பல்வேறு தனியார் துறைகளும் வழங்குகின்றன. அதனால், அரசு சேவை வழங்கும் துறைகளில் உள்ள அதிகாரிகள், அந்தந்த பிரிவில் சிறந்த சேவையின்படி, சர்வதேசதர அளவிலும் நிர்ணயிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், பிரச்சனை திட்டத்தில் அல்ல; நடைமுறையிலேயே உள்ளது என்றார். நாட்டின் மற்ற பகுதியில் உள்ள அதிகாரிகள் வடகிழக்கு பகுதியில் பணிபுரிவதைத் தவிர்க்கின்றனர். இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்க கூடிய வகையிலும் அணுக்க்கூடிய வகையிலும் உள்கட்டமைப்பு துறை வளர்ச்சி அடைந்தால் வடகிழக்கு பகுதியும் வளர்ச்சி அடையும்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் 21வது நூற்றாண்டு இந்தியாவிற்கு சொந்தமானது. ‘விஷ்வ குரு’ இடத்திற்கு இந்தியா முன்னேறும். இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியை மீண்டும் உலகம் கவனிக்க ஆரம்பித்துள்ளது.
பாதுகாப்பு தயார் நிலை குறித்து பதில் அளித்த பிரதமர், அண்டை நாடுகளுடனான நல்லுறவை கொண்ட உள்நாட்டு பாதுகாப்பு கருவி உற்பத்தி திறன் கொண்ட பல்முக அணுகுமுறை தேவை என்று தெரிவித்தார்.
Told IAS probationers- “Light the lamp within you!” Extended my best wishes to them & answered their questions. http://t.co/r0iZuAYgwc
— Narendra Modi (@narendramodi) February 16, 2015