மக்கள் சிரமமின்றி எளிதாக வாழ்வதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து 2 கிலோ எடையுள்ள காசநோய் மருந்துகளை 40 கி.மீ. தொலைவில் உள்ள டெஹ்ரி கர்வால் மாவட்ட மருத்துவமனைக்கு 30 நிமிடத்தில் கொண்டு செல்ல ஆளில்லா விமானங்களை சோதனை அடிப்படையில் பயன்படுத்தியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
பிரதமரின் ட்விட்டர் பதிவு வருமாறு:
“மக்களுக்கு மேலும் ‘எளிதாக வாழ்வதற்கு‘ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.”
***
(Release ID: 1900037)
VL/PKV/AG/RR
India attaches great importance to leveraging technology to further ‘Ease of Living’ for people. https://t.co/AxYBj2TW1M
— Narendra Modi (@narendramodi) February 17, 2023