Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாவீர் பிறந்தநாளை முன்னிட்டு பகவான் மகாவீரருக்கு பிரதமர் மரியாதை


மகாவீர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகவான் மகாவீரருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பகவான் மகாவீரர் எப்போதும் அகிம்சை, உண்மை, கருணை ஆகியவற்றை வலியுறுத்தி வந்தவர் என்றும், அவரது கொள்கைகள் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு வலிமையை அளிக்கின்றன என்றும் திரு மோடி கூறியுள்ளார். கடந்த ஆண்டு பிராகிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்தை அரசு வழங்கியதாகவும், அந்த முடிவு பலரது பாராட்டைப் பெற்றது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அகிம்சை, உண்மை மற்றும் கருணையை எப்போதும் வலியுறுத்திய பகவான் மகாவீரருக்கு நாம் அனைவரும் தலைவணங்குகிறோம். அவரது கொள்கைகள் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு வலிமை அளிக்கின்றன. அவரது போதனைகள் சமண சமூகத்தினரால் அழகாகப் பாதுகாக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டுள்ளன. பகவான் மகாவீரரால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பு மிக்கவர்களாக உள்ளதோடு சமூகத்தின் நல்வாழ்வுக்கும் பங்காற்றி உள்ளனர்.

பகவான் மகாவீரரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற எங்கள் அரசு எப்போதும் பாடுபடும். கடந்த ஆண்டு, பிராகிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கினோம், இந்த முடிவு நிறைய பாராட்டுக்களைப் பெற்றது’’.

***

(Release ID: 2120638)

SV/PKV/RJ