Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாவீர் பிறந்தநாளில் பகவான் மகாவீரரின் சிந்தனைகள் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்


மகாவீர் பிறந்த நாளை முன்னிட்டு பகவான் மகாவீரரின் காலத்தால் அழியாத போதனைகளைச் சுட்டிக்காட்டியுள்ள  பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமது சொந்த வாழ்க்கையில் அவரது போதனைகள் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.

மோடி ஆவணக் காப்பகம்(மோடி ஆர்க்கிவ்) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பகவான் மகாவீரரின் போதனைகள் மற்றும் ஜெயின் சமூகத்துடன் பிரதமரின் நீண்டகால ஆன்மீகப் பிணைப்பை எடுத்துக்காட்டுகிறது.

இந்தப் பதிவுக்கு பதிலளித்து பிரதமர்வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பகவான் மகாவீரரின் கொள்கைகள் நான் உட்பட எண்ணற்ற மக்களுக்கு பெரிதும் உத்வேகம் அளித்துள்ளன. அவரது எண்ணங்கள் அமைதியான மற்றும் கருணையுள்ள பூமியை உருவாக்குவதற்கான வழியைக் காட்டுகின்றன’’.

***

(Release ID: 2120696)

SV/PKV/RJ