பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாவீர் ஜெயந்தி அன்று பகவான் மகாவீர்-க்கு அஞ்சலி செலுத்தினார். அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு பகவான் மகாவீர் வழி காட்டியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்:
“இன்று ஒரு சிறப்பான நாள். பகவான் மகாவீர்-ன் போதனைகளை நினைவு கூரும் நாள். பகவான் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளமான சமூகத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டியுளார். அவரது வழியில் நாமும் ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த சேவையாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
——
AP/JL/KPG
Today is a special day, when we recall the noble teachings of Bhagwan Mahavir. He showed the way to build a peaceful, harmonious and prosperous society. Inspired by him, may we always serve others and also bring a positive difference in the lives of the poor and downtrodden. pic.twitter.com/OKZ5yqZmyo
— Narendra Modi (@narendramodi) April 4, 2023