Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஷ்ட்ரா துலே நகருக்கு பிரதமர் வருகை; பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

மகாராஷ்ட்ரா துலே நகருக்கு பிரதமர் வருகை; பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

மகாராஷ்ட்ரா துலே நகருக்கு பிரதமர் வருகை; பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

மகாராஷ்ட்ரா துலே நகருக்கு பிரதமர் வருகை; பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.


 

பிஎம்கேஎஸ்ஒய் திட்டத்தின் கீழ் பனசாரா நடுத்தரத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

பிரதமர் சுல்வதே ஜம்பால் கனோலி நீர்ப்பாசன திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ஜல்கான்உதானா இரட்டை வழிப்பாதை மற்றும் மின்மயமாக்கல் ரயில் திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

புஷாவல்பந்த்ரா காந்தேஷ் எக்ஸ்பிரஸ் ரயில் கொடியசைத்து தொடக்கம்
 

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழிதீர்க்கப்படும் என்றார் பிரதமர்.

 

பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிராவின் துலே நகருக்கு வருகை தந்தார். அப்போது, மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா மாநில கவர்னர் திரு.சி.வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர். திரு. நிதின் கட்கரி, மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் திரு.சுபாஷ் பாம்ரே,  மகாராஷ்டிரா மாநில முதல்வர் திரு.தேவேந்திர பட்நவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புல்வாமாவில் தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களை பாராட்டிய பிரதமர், இந்த துயரமான, துக்கம் மிகுந்த நேரத்தில் அவர்களின் பின்னால் நாடே நிற்கிறது என்றார். தீவிரவாதத் தாக்குதலை அரங்கேற்றவர்களுக்கு வலுவான எச்சரிக்கையை விடுத்த அவர், மற்றவர்களின் விஷயங்களில் தலையிடக் கூடாது என்ற கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. இருப்பினும், இந்தியாவின் விவகாரங்களில் யாராவது தலையிட்டால், அது தண்டிக்கப்படாமல் இருக்காது. ‘‘இந்தியாவின் துணிச்சல் மிகுந்த மகன்களை மட்டுமல், அவர்களை துணிச்சல் மிகுந்த வீரர்களாக பெற்றெடுத்த அவர்களின் தாய்மார்களையும் நான் வணங்குகிறேன். புல்வாமா தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அப்போது இந்தியா புதிய பார்வையைக் கொண்ட புதிய இந்தியா என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ளும். சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழிதீர்க்கப்படும்’’ என்றார்.

பி.எம்.கே.எஸ்.ஒய்  திட்டத்தின் கீழ், பன்சாரா நீர்ப் பாசன திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இதன் மூலம், துலேவில் உள்ள 21 கிராமங்களின் சுற்றுப்புற பகுதியில் உள்ள 7585 ஹெக்டேர் பகுதி விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெற்று, தண்ணீர் பற்றாக்குறை பிராந்தியங்களுக்கு வாழ்வாதரமாக செயல்படும். அவர் கூறுகையில், பிரதமரின் நீர்ப்பாசன திட்டங்களின் மூலம் துலே உள்ளடங்கிய மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளின் நீர்ப்பாசன நிலை மேம்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ‘‘கடந்த 4 ஆண்டுகளில் 99 நீர்ப்பாசன திட்டங்கள் விரைவான வேகத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதில் மகாராஷ்டிராவில் மட்டுமே 26 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான், பன்சாரா திட்டம். இது, கடந்த 25 ஆண்டுகளுக்கு  முன்பு, வெறும் ரூ.21 கோடியில் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது அது ரூ.500 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான நமது முயற்சிகளின் விளைவே இதுஎன்றும் அவர் கூறினார்.

ஜல்கான்உதானா இரட்டை வழிப்பாதை மற்றும் மின்மயமாக்கல் ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2,400 கோடியிலான திட்டங்கள் விரைவான வேகத்தில் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் சரக்குகள் மற்றும் மக்களின் போக்குவரத்து எளிதாகி உள்ளது. வடக்கு மற்றும் தென் இந்தியாவை இணைக்கும் ரயில் பாதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் ஒரு முழுமையான வளர்ச்சியை கொடுக்கும்.

பிரதமர் காணொலிக் காட்சி இணைப்பு மூலம், புஷாவல்பாந்த்ரா காந்தேஷ் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில், மும்பை மற்றும் புஷாவல் இடையே நேரடி இணைப்பை ஏற்படுத்தும். மேலும், நந்தர்பார்உதானா புறநகர் மின்சார ரயிலையும், உதானாபாலடி புறநகர் மின்சார ரயிலையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

51 கிமீ தூரம் கொண்ட துலேநர்தானா ரயில்வே பாதைக்கும், 107 கிமீ தூரம் கொண்ட ஜல்கான்மன்மத் இடையே 3வது ரயில் பாதைக்கும் பிரதமர் பட்டனை அழுத்தி, அடிக்கல் நாட்டினார். இத்திட்டங்கள், பயண நேரத்தை குறைப்பதுடன், ரயில் போக்குவரத்தை நிர்வகிப்பதிலும் பெரிதும் உதவி புரியும்.

பிரதமர் கூறுகையில், இந்த்த் திட்டங்கள் இப்பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும். மேலும், விரைவில் துலே நகரம் வளர்ச்சியில் சூரத் நகருக்கு கடும் போட்டியை தரும் என்றார்.

சுல்வத் ஜம்பால் கனோலி நீர்பாசன திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இது, தபி ஆற்றில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து, இணைக்கப்பட்ட அணைகள், குளங்கள், கால்வாய்களில் சேர்க்கும். இதன் மூலம் 100 கிராமங்களைச் சேர்ந்த 1 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.

அம்ருத் திட்டத்தின் கீழ் துலே நகரில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டினர். குடிநீர் விநியோகத் திட்டமானது, தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் துலே பிராந்தியத்திற்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும்.

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையை சுலபமாகவும், சிறந்ததாகவும் மாற்றுவதற்கு தனது அரசாங்கம் ஒவ்வொரு முயற்சியையும் செய்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். அவர் கூறுகையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் துலேவில் 1800 பேர் உட்பட மகாராஷ்டிராவில் 70,000 நோயாளிகளை சேர்த்து, 12 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது என்றார்.