மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மராத்தி மொழிக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, மராத்தி மொழி பேசும் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை அங்கீகரித்ததோடு, மகாராஷ்டிராவின் கனவை நிறைவேற்றுவதில் பங்களிப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மகாராஷ்டிர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்த வரலாற்று சாதனையின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் தெரிவித்தார். மேலும், பெங்காலி, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமி மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர், இந்த மொழிகளுடன் தொடர்புடைய மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மராத்தி மொழியின் வரலாறு மிகவும் வளமானது என்றும், இந்த மொழியிலிருந்து வெளிப்பட்ட அறிவு நீரோட்டங்கள் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டி வந்துள்ளன என்றும், அவை இன்றும் கூட நமக்கு வழிகாட்டுகின்றன என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மராத்தி மொழிக்கு வழங்கப்பட்ட பாரம்பரிய அந்தஸ்து, சத்ரபதி சிவாஜி மகாராஜின் 350 வது முடிசூட்டு விழாவின் போது முழு நாடும் அவரை கௌரவிப்பதாகும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மராத்தி மொழியின் விலைமதிப்பற்ற பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பல புரட்சிகர தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கும் மராத்தி மொழியை ஒரு ஊடகமாக எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும் குறிப்பிட்டார். லோகமான்ய திலகர் தனது மராத்தி செய்தித்தாளான கேசரி மூலம் அந்நிய ஆட்சியின் அடித்தளத்தையே அசைத்துப் பார்த்தார். அவரது மராத்தி உரைகள் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் சுயசார்பு வேட்கையைத் தூண்டின என்று அவர் கூறினார். நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் மராத்தி மொழி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், தனது மராத்தி செய்தித்தாளான சுதாரக் மூலம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்த சமூக சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரத்தை வழிநடத்திய கோபால் கணேஷ் அகர்கர் போன்ற பிற பிரமுகர்களின் பங்களிப்புகளையும் நினைவு கூர்ந்தார்.
மராத்தி இலக்கியம் இந்தியாவின் விலைமதிப்பற்ற பாரம்பரியம் என்றும், நமது நாகரிகத்தின் வளர்ச்சி மற்றும் கலாச்சார முன்னேற்றத்தின் கதைகளைப் பாதுகாக்கிறது என்றும் திரு மோடி வலியுறுத்தினார். சுயராஜ்யம், சுதேசி, தாய்மொழி மற்றும் கலாச்சார பெருமை ஆகிய கொள்கைகளைப் பரப்புவதில் மராத்தி இலக்கியம் முக்கிய பங்கு வகித்ததாக அவர் குறிப்பிட்டார். “மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, அது கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் மற்றும் இலக்கியத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். போவாடா என்ற நாட்டுப்புறப் பாடல் பற்றிப் பேசிய திரு. மோடி, சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் பிற வீரர்களின் வீரம் குறித்த கதைகள் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் நம்மை வந்தடைந்துள்ளன என்றார்.
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக பிராந்திய மொழிகளில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அரசை நாடு கொண்டுள்ளது என்பதை வலியுறுத்திய பிரதமர், புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை மராத்தியில் படிப்பதற்கான சாத்தியத்தை எடுத்துரைத்தார். அறிவியல், பொருளாதாரம் மற்றும் கலை போன்ற பல்வேறு பாடங்களில் மராத்தியில் புத்தகங்கள் கிடைப்பது அதிகரித்து வருவதாகவும், மராத்தியை கருத்துக்களின் வாகனமாக மாற்றுவதை வலியுறுத்துவதாகவும், இதனால் அது துடிப்பானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மராத்தி இலக்கியத்தை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அவர் ஊக்குவித்தார், மேலும் அதன் மொழிபெயர்ப்பு அம்சத்தின் மூலம் மொழி தடைகளை உடைக்க உதவும் பாஷினி பயன்பாட்டையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2062506®=3&lang=1
Marathi being recognised as a Classical Language is a moment of pride for everyone. Speaking at a programme in Mumbai. https://t.co/Pz0DeLcU86
— Narendra Modi (@narendramodi) October 5, 2024
मराठी के साथ बंगाली, पाली, प्राकृत और असमिया भाषाओं को भी क्लासिकल लैंग्वेज का दर्जा दिया गया है।
— PMO India (@PMOIndia) October 5, 2024
मैं इन भाषाओं से जुड़े लोगों को भी बधाई देता हूं: PM @narendramodi pic.twitter.com/Ev925WZTOz
मराठी भाषा का इतिहास बहुत समृद्ध रहा है। pic.twitter.com/P37VWmjyDh
— PMO India (@PMOIndia) October 5, 2024
महाराष्ट्र के कई क्रांतिकारी नेताओं और विचारकों ने लोगों को जागरूक और एकजुट करने के लिए मराठी भाषा को माध्यम बनाया: PM @narendramodi pic.twitter.com/hq6RQocRe3
— PMO India (@PMOIndia) October 5, 2024
भाषा सिर्फ बातचीत का माध्यम नहीं होती।
— PMO India (@PMOIndia) October 5, 2024
भाषा का संस्कृति, इतिहास, परंपरा और साहित्य से गहरा जुड़ाव होता है: PM @narendramodi pic.twitter.com/lMTG4EuJll