மும்பையின் குண்டாவாலி ரயில் நிலையத்தில் இருந்து மோக்ரா வரை மெட்ரோ ரயிலில் இன்று (ஜனவரி 19, 2023) பிரதமர் திரு நரேந்திர மோதி பயணம் செய்தார். மும்பை 1 என்ற மொபைல் செயலியையும், தேசிய பொது போக்குவரத்து அட்டை (மும்பை 1) யையும் பிரதமர் வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது, மெட்ரோ புகைப்பட கண்காட்சியையும், முப்பரிமாண மாதிரி வடிவத்தையும் அவர் பார்வையிட்டார். மெட்ரோ ரயில் பயணத்தின் போது மாணவர்கள், பயணிகள், மெட்ரோ கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடினார்.
மகாராஷ்டிர ஆளுநர் திரு பகத்சிங் கோஷியாரி, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் திரு தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் பிரதமருடன் நிகழ்வில் பங்கேற்றனர்.
முன்னதாக, மும்பை மெட்ரோ ரயில் வழித்தடங்கள் 2ஏ, 7 ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தை மறுசீரமைப்பதற்கும், 7 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். மும்பையில் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலான சாலைகளை கான்கீரிட் சாலைகளாக மாற்றும் பணியையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
***
(Release ID: 1892317)
SMB/PK/KRS
PM @narendramodi on board the Metro in Mumbai. pic.twitter.com/nE03O7nDmW
— PMO India (@PMOIndia) January 19, 2023
On board the Metro, which will boost ‘Ease of Living’ for the people of Mumbai. pic.twitter.com/JG4tHwAAXA
— Narendra Modi (@narendramodi) January 19, 2023