Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சுமார் ரூ. 38,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சுமார் ரூ. 38,800 கோடி மதிப்பிலான பல்வேறு  வளர்ச்சி திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டிய பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மும்பையில் பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் அங்கீகரிக்கப்பட்ட கடன்களை பிரதமர் விடுவித்தார். மும்பை மெட்ரோ ரயில் பாதைகள் 2 & 7- நாட்டுக்கு அர்ப்பணித்தல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம், ஏழு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மறுசீரமைப்பதற்காக அடிக்கல் நாட்டுதல், 20 இந்துஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே தெருவோர உணவு கடைகளைத் துவக்குதல், மும்பை நகரில் 40 கிலோமீட்டர் சாலையை  கான்கிரீட் சாலையாக்கும்  திட்டத்தைத் தொடங்குதல் ஆகியவை இதில்  அடங்கும்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மும்பையை சிறந்த பெருநகரமாக மாற்றுவதில் இன்றைய திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறி, இத்திட்டங்களின் பயனாளிகள் மற்றும் மும்பைவாசிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். “சுதந்திரத்திற்குப் பிறகுஇந்தியா தனது கனவுகளை நனவாக்கும் துணிச்சலை இப்போதுதான் முதல் முறையாகக் கொண்டுள்ளதுஎன்ற பிரதமர், இந்தியாவில் முந்தைய காலகட்டத்தை நினைவு கூர்ந்தார். அப்போது வறுமை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டது, உலகத்திலிருந்து உதவி பெறுவது மட்டுமே அப்போதிருந்த ஒரே வழி. இன்று, இந்தியாவின் உறுதிப்பாட்டின்  மீது உலக நாடுகள் நம்பிக்கை காட்டும் முதல் நிகழ்வு இது என்று அவர் கூறினார். வளர்ந்த இந்தியாவை இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், இந்தியாவைப் பற்றிய அதே நம்பிக்கையை உலகில் காணலாம் என்று பிரதமர் கூறினார். இந்தியா தனது திறன்களை நன்றாகப் பயன்படுத்துகிறது என்ற நம்பிக்கையின் காரணமாக இந்த நேர்மறைத் தன்மை ஏற்பட்டுள்ளது என்றார் பிரதமர். “இன்று இந்தியா முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையால் நிறைந்துள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் உத்வேகத்தைப் பெற்றதன் மூலம், ‘ ஒளிமற்றும்தன்னாட்சி’  ஆகியவற்றின் எழுச்சி இரட்டை எஞ்சின் அரசில் வலுவாக வெளிப்படுகிறதுஎன்று பிரதமர் கூறினார்.

நாட்டுக்கும்கோடிக்கணக்கான குடிமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் மோசடிகளின் சகாப்தத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். “நாங்கள் இந்த சிந்தனையை மாற்றியுள்ளோம், இன்று இந்தியா தனது ஆற்றலை சமூக உள்கட்டமைப்பிற்காக எதிர்கால சிந்தனை மற்றும் நவீன அணுகுமுறையுடன் பயன்படுத்தி வருகிறதுஎன்று பிரதமர் கூறினார். வீடுகள், கழிப்பறைகள், மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு, இலவச மருத்துவ சிகிச்சை, மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம் ஆகியவை வேகமாக விரிவடையும் அதே வேளையில், மறுபுறம் நவீன இணைப்பும் அதே உந்துதலைப் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். “இன்றைய தேவைகள் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகள் ஆகிய இரண்டிலும் பணிகள் நடந்து வருகின்றனஎன்று அவர் கூறினார். இந்த கடினமான காலத்திலும் இந்தியா 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கி வருவதாகவும், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முன்னெப்போதும் இல்லாத முதலீடுகளை செய்து வருவதாகவும் அவர் கூறினார். “இது இன்றைய இந்தியாவின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இது வளர்ந்து வரும் இந்தியா என்னும் கருத்தின் பிரதிபலிப்பாகும்என்று அவர் கூறினார்.

வளரும் இந்தியா  உருவாக்கத்தில் நகரங்களின் பங்கை விளக்கிய பிரதமர், அமிர்த காலத்தின் போது, மகாராஷ்டிராவின் பல நகரங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் என்றார். அதனால்தான் மும்பையை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவது இரட்டை எஞ்சின் அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.  2014 இல் மும்பையில் 10-11 கிமீ நீளமான மெட்ரோ பாதை மட்டுமே இருந்தது, இரட்டை என்ஜின் அரசில்  மெட்ரோ புதிய வேகம் பெற்றது, ஏனெனில் மும்பை வேகமாக 300 கிமீ மெட்ரோ கட்டமைப்பை நோக்கி நகர்கிறது.

இந்திய ரயில்வே மற்றும் மும்பை மெட்ரோவின் முன்னேற்றத்திற்காக நாடு முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உள்ளூர் ரயில்களும் இதன் மூலம் பயனடைவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இரட்டை எஞ்சின் அரசு, அதே மேம்பட்ட சேவைகள், தூய்மை, பயணத்தின் வேகம் ஆகியவற்றைப் பொதுமக்களுக்கு வழங்க முயற்சிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இதன் விளைவாக, இன்றைய ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் போல் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவின் மிகப் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான சத்ரபதி மகாராஜ் முனையம் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மேம்படுத்தப்பட உள்ளதாகவும், இது  21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் பிரகாசமான உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். “பொது மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதும், பயண அனுபவத்தை எளிதாக்குவதும் முக்கிய நோக்கமாகும். மேலும்,   ரயில்வே தொடர்பான சேவைகளுக்கு மட்டுமல்லாமல்  பன்முக இணைப்புக்கான மையமாகவும் ரயில் நிலையம் செயல்படும் என்றும் அவர் கூறினார். “பேருந்து, மெட்ரோ, டாக்ஸி அல்லது ஆட்டோ என அனைத்து போக்குவரத்து முறைகளும் ஒரே கூரையின் கீழ் இணைக்கப்படும், மேலும் இது அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற இணைப்பை வழங்கும்என்று பிரதமர் தெரிவித்தார். தாம் ஏற்கனவே அறிவித்தவாறு இந்த வசதிகள் அனைத்தும் ஒவ்வொரு நகரத்திலும் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.

மெட்ரோ இணைப்பு விரிவாக்கம், வந்தே பாரத் ரயில், புல்லட் ரயிலை விட அதிவேக இணைப்பு ஆகியவற்றின் மூலம் மும்பை புதுப்பொலிவு பெறும் என பிரதமர் தெரிவித்தார்.

ஏழை தொழிலாளர்கள், பணியாளர்கள் முதல் கடை உரிமையாளர்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் வரை என மும்பையில் அனைவருக்கும் வசதியை  இது வழங்கும் என பிரதமர் கூறினார். அருகாமை மாவட்டத்திலிருந்து மும்பைக்கு பயணிப்பது எளிதாகும். மேலும் கடற்கரை சாலை, இந்து மில்ஸ்  ஸ்மாரக், நவி மும்பை விமான நிலையம், பிரான்ஸ் துறைமுக இணைப்பு மற்றும் இதுபோன்ற திட்டங்கள் மும்பைக்கு புது வலிமையை தருகிறது என பிரதமர் தெரிவித்தார்.

தாரவி புனரமைப்பு திட்டம் மற்றும் பழைய குடியிருப்புகள் மேம்பாடு ஆகியவை வேகமெடுத்துள்ளதாகவும் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை செய்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக் நாத் ஷிண்டே மற்றும் அவரது குழுவை பிரதமர் பாராட்டினார். மும்பை சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து பேசிய பிரதமர், இவை இரட்டை எஞ்சின் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளன இன்று பிரதமர் கூறினார். இந்திய நகரங்களை முழுவதும் மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், நகர்ப்புற பிரச்சினைகளான மாசு மற்றும் சுத்தமின்மை ஆகியவற்றிற்கான தீர்வுகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மின்சார வாகன உள் கட்டமைப்பு, உயிரி எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்து அமைப்பு, ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துதல், குப்பையில் இருந்து செல்வம் இயக்கம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆகியவை இதற்கான முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.

நகரப்புற மேம்பாட்டில் திறன் மற்றும் அரசியல் தலையீடு ஆகியவற்றிற்கு பஞ்சம் இல்லை. இருப்பினும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வரை மும்பை போன்ற நகரங்களில் வளர்ச்சி என்பது சாத்தியமில்லைஇதனால்தான் மும்பையின் வளர்ச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், பெரு நகரங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக உபயோகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் வளர்ச்சியை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்

பிரதமரின் சுவநிதி திட்டத்தின் மூலம் 35 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைந்துள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிராவில் 5 லட்சம் வியாபாரிகள் பிணையில்லா கடன் பெற்று பயனடைந்துள்ளனர். இவை அரசியல் காரணங்களுக்காக முந்தைய காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக மத்திய அரசு முதல் மகாராஷ்டிரா மற்றும் மும்பை ஆகியவற்றிற்கு இடையே போதிய கூட்டு ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் 50 ஆயிரம் கோடி அளவிற்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறுகிய காலத்தில் மேற்கொண்டதாக, பிரதமர் பாராட்டினார்.

சப்கா பிரயாஸ் என்ற உணர்வு இருந்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு டிஜிட்டல் இந்தியா ஒரு வாழும் உதாரணமாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.

நான் உங்களோடு இருக்கிறேன், நீங்கள் 10 அடி எடுத்து வைத்தால் நான் 11 அடி எடுத்து வைக்க தயாராக இருக்கிறேன் என்று சாலையோர வியாபாரிகளிடம் பிரதமர் தெரிவித்தார். மேலும் சிறு வர்த்தகர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மேம்பாட்டு பணிகளுக்காக மும்பை மற்றும் மகாராஷ்டிரா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரது கூட்டு செயல்பாடு மகாராஷ்டிராவின் கனவுகளை நனைவாக்கும் என உறுதிபடக் கூறினார்.

இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா ஆளுநர் திரு பகத்சிங் கோஸ்யாரி, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர்கள் திரு பியூஸ் கோயல், திரு நாராயன் ரானே, மத்திய இணை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னணி

பிரதமர் நரேந்திர மோடி மும்பையில் 38,800 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் முடிவற்ற பணிகளை தொடங்கி வைத்தார். தடையற்ற நகர்ப்புற போக்குவரத்து சூழல் பிரதமரின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இதன்படி 1200 கோடி ரூபாய் அளவிலான மெட்ரோ ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 18.6 கி.மீ. நீளம் கொண்ட  2 (மஞ்சள் தடம்தஹிசார் –  தாதர் நகர் இடையேயும், 16.5 கி.மீ. நீளம் கொண்ட  தடம் 7 (சிவப்பு தடம்) அந்தேரி தஹிசார் இடையே அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

மேலும் 17, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள 7 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நிலையங்கள் மலாட், பாந்தப், வேர்சோவா, கட்கோபார், பாந்த்ரா, தாராவி மற்றும் ஒர்லி ஆகிய பகுதியில் அமைய உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 2460 எம் எல் டி.

மும்பையில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக 20 ஹிந்துரித்யாசாம்ராட் பாலாசாகிப் தாக்கரே ஆப்லா தவக்னா நல மையங்களை தொடங்கி வைத்தார். இவை அத்தியாவசிய மருத்துவ சேவைகளான ஆரோக்கிய பரிசோதனை, மருந்துகள், இலவச நோயறிதல் ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்குகிறது. மேலும் 320 படுக்கை வசதி கொண்ட பாந்தப் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, 306 படுக்கை வசதி கொண்ட சித்தார்த்த நகர் மருத்துவமனை மற்றும் 152 படுக்கை வசதி கொண்ட ஓஷிவாரா மகப்பேறு மையம் ஆகியவற்றிற்கான சீரமைப்புகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நடவடிக்கை அங்குள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு சிறப்பான மருத்துவ வசதிகளை வழங்கும்.

பிரதமர் மும்பையில் 400 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலைகளுக்கு 6100 கோடி ரூபாயில் கான்கிரீட் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார். மும்பையில் சுமார் 2050 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளில் 1200 கிலோமீட்டர் மேற்பட்ட சாலைகள் கான்கிரீட் பொருத்தப்பட்டுள்ளன அல்லது பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் 850 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளில் உள்ள சேதங்கள் போக்குவரத்தை பாதிக்கின்றன. சாலைகளுக்கு கான்கிரீட் அமைக்கும் பணி இந்த சவாலை எதிர்கொள்ள உதவும். புதிதாக அமைய உள்ள இந்த கான்கிரீட் சாலைகள் விரைவான போக்குவரத்து, பாதுகாப்பு அளிப்பதோடு சிறந்த பாதாள சாக்கடை வசதிகள் மற்றும் மழைநீர் வடிகால் ஆகியவற்றுடன் அமைய உள்ளது.

மேலும் பிரதமர் சத்திரபதி சிவாஜி மகாராஜ் ரயில் முனைய மறு சீரமைப்பிற்கும் அடிக்கல் நாட்டினார்.

 நெரிசலை குறைத்தல், வசதிகள் மேம்பாடு, பல்முனைய ஒருங்கிணைப்பு ஆகியவற்றோடு பாரம்பரிய சின்னத்தை அதன் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் இந்த சீரமைப்பு பணிகள் அமையும். இதற்காக 1800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பயனிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

——

PKV/TV/KPG