மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 2 லட்சமும், . காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000-மும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
“மகாராஷ்டிராவின் புல்தானாவில் நிகழ்ந்த பயங்கர பேருந்து விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தம். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது”
“புல்தானா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்’’.
***
PKV/DL
Deeply saddened by the devastating bus mishap in Buldhana, Maharashtra. My thoughts and prayers are with the families of those who lost their lives. May the injured recover soon. The local administration is providing all possible assistance to the affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 1, 2023
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of those who lost their lives in the bus mishap in Buldhana. Rs. 50,000 would be given to the injured: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 1, 2023