Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஜா சுஹல்தேவ் நினைவு தபால்தலை வெளியீடு, காசிபூர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பிரதமர் ஆற்றிய உரை (சுருக்கம்)

மகாராஜா சுஹல்தேவ் நினைவு தபால்தலை வெளியீடு, காசிபூர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பிரதமர் ஆற்றிய உரை (சுருக்கம்)

மகாராஜா சுஹல்தேவ் நினைவு தபால்தலை வெளியீடு, காசிபூர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பிரதமர் ஆற்றிய உரை (சுருக்கம்)

மகாராஜா சுஹல்தேவ் நினைவு தபால்தலை வெளியீடு, காசிபூர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பிரதமர் ஆற்றிய உரை (சுருக்கம்)


இங்கு பெருந்திரளாக கூடியுள்ள எனதருமை சகோதர சகோதரிகளே,

காசிபூருக்கு மீண்டும் ஒருமுறை வந்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த மண் நாட்டின் பாதுகாப்புக்கு வீரர்களை உருவாக்கி வருகிறது. ஞானியர் பலர் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளனர்.

நண்பர்களே

எனது இன்றைய (29.12.2018) உத்தரப்பிரதேச பயணத்தின் போது பூர்வாஞ்சலை நாட்டின் முக்கிய மருத்துவ மையமாக உருவாக்கவும், வேளாண்மை குறித்த ஆராய்ச்சி மையத்தை  உருவாக்கவும் உத்தரபிரதேசத்தின் சிறு தொழில்களை வலுப்படுத்தவும் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சற்று முன் மகாராஜா சுஹல்தேவ் நினைவாக சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டது. இது நாடு அவரது வீரத்துக்கு செலுத்தும் மரியாதையாகும். ரூ.5 மதிப்புள்ள இந்த தபால்தலை, அஞ்சலகங்கள் மூலம் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று சேர உள்ளது. இந்த தபால்தலைகள் மூலம் மகாராஜா சுஹல்தேவ் ஆற்றிய மாபெரும் பங்கு பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நண்பர்களே
அன்னை பாரதத்தின் கவுரவத்தைப் பாதுகாக்க போராடியவர்களில் மகாராஜா சுஹல்தேவும் ஒருவர். அவரது ஆட்சியின் போது திருட்டுப் பயமில்லை, ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. அவர்களது வாழ்க்கை எளிதாக்கப்பட்டது, சாலைகள், தோட்டங்கள், பள்ளிகள் கட்டப்பட்டன. அன்னியர்களின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இவை அனைத்தும் மகாராஜா சுஹல்தேவ் எடுத்த நடவடிக்கைகளின் பலனாகத்தான்.

இத்தகைய தேசம் காத்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பெருமைப்படுத்துவது நமது அரசின் கடமையாகும்.

மகாராஜா சுஹல்தேவ் பற்றிப் பேசும் போது, பஹ்ரெச் ஜனடாவில் உள்ள சித்தாராவை மறக்க முடியாது. இங்குதான் மகாராஜா அன்னியர்களை முறியடித்தார். இதன் நினைவாக இங்கே மகாராஜா சுஹல்தேவுக்கு சிலை அமைக்க யோகிஜி தலைமையிலான அரசு முடிவு செய்திருப்பதற்கு எனது பாராட்டுக்கள்.

மகாராஜா சுஹல்தேவ் பெரிய வீரர் மட்டுமன்றி மிகவும் இரக்க உணர்வு கொண்டவர். நமது அரசு நடைமுறைகளில் இத்தகைய இரக்க உணர்வு இணைக்கப்பட வேண்டும்.

இன்று அரசு, பொதுமக்கள் எளிதில் அணுக கூடியதாக உள்ளது. அவர்களது பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த அரசு நலிந்த பிரிவினர் தற்சார்பு பெற்று அனைத்து உரிமைகளையும் அனுபவித்து தங்களது குரலை கேட்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

வலுவான அடித்தளம் அமைப்பதில் அரசு வெற்றியடைந்துள்ளது. எனினும், இந்த அடித்தளத்தில் வலுவான கட்டிடம் அமைக்கும் பணி எஞ்சியுள்ளது. பூர்வாஞ்சலில் சுகாதார சேவைகளை விரிவாக்குவது இந்த வகையில் எடுக்கப்படும் முக்கியமான நடவடிக்கை.

சற்று முன் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி நவீன மருத்துவ வசதிகளை வழங்குவதுடன் காசிபூரில் புதிய மிகுந்த திறம் மிக்க மருத்துவர்களை உருவாக்க உள்ளது. விரைவில் இந்த மருத்துவமனை உங்கள் பயன்பாட்டுக்கு வரும். இது தவிர காசிபூரில் 100 படுக்கைகள் கொண்ட மகப்பேறு மருத்துவமனையும் உருவாக்கப்பட உள்ளது.

சகோதரர்களே சகோதரிகளே,

காசிபூரில் புதிய மருத்துவக் கல்லூரி, கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை, வாரணாசியில் பல்வேறு மருத்துவமனைகள், பழைய மருத்துவமனைகளை விரிவாக்குதல் ஆகிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ வசதிப் பணிகள் பூர்வாஞ்சலில் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆயுஷ்மான் பாரத் திட்டம், மோடிகேர் என்று அழைக்கப் பெறும் பிரதமர் ஜன் அவுஷத் திட்டம் ஆகியவற்றின் மூலம் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் ஆரோக்கியம் நாட்டில் முதல் முறையாக முன்னிறுத்தப்படுகிறது. பிரதமர் ஜன் அவுஷத் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டப் பலன்கள் அதிகபட்சம் மக்களை சென்றடைய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் ஜீவன் ஜோதி திட்டம், சுரக்ஷா காப்பீட்டுத் திட்டம் போன்ற காப்பீட்டுத் திட்டங்கள் குறைந்த பிரீமியம் செலுத்தி நிறைந்த பலன்களைப் பெறுவதற்கானவை. இந்தத் திட்டங்களின் மூலம் ரூ.3 ஆயிரம் கோடியானது, வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு சென்று சேர்ந்துள்ளது. இதில் ரூ.400 கோடி உத்தரப்பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு சென்றடைந்துள்ளது.

இத்தகைய பெரிய திட்டங்கள் எல்லாம், அரசு வெளிப்படையாகவும், உணர்வுபூர்வமாகவும் செயல்பட்டு, சுயநலத்திற்கு மேலாக பொது நலம் முன்வைக்கப்படும் போது எளிதாகவும், விரைவாகவும் நிறைவு பெறுகின்றன.

நாட்டில் காசியில் அமைக்கப்பட்டுள்ள அரிசி ஆராய்ச்சி நிறுவனம் போன்ற திட்டங்கள் விதையிலிருந்து சந்தை வரை என்ற பெரிய திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இன்று விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாக்காளர்களை திருப்திப்படுத்தும் அரசியல் மத்தியப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் அரங்கேறி உள்ளது. கர்நாடகாவில் சமீபத்தில் பின்வாசல் வழியாக காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்குவதாக கூறி, அவர்களது வாக்குகள் திருடப்பட்டுள்ளன. மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து அரசு அமைத்துள்ள அவர்கள், எத்தனை விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளித்திருக்கிறார்கள் தெரியுமா? வெறும் 800 பேருக்குத்தான். இப்போது கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகள் தங்களது கடனை திரும்ப செலுத்துமாறு கட்டாயப்படுத்த காவல் துறையினர் பயன்படுத்தப்படுகிறார்கள்.

உடனடி அரசியல் ஆதாயத்திற்காக எடுக்கப்படும் முடிவுகளும் அளிக்கப்படும் உறுதிமொழிகளும் நாட்டை சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வைக் கொண்டு வர இயலாது.

இப்படி குழந்தைக்கு பஞ்சு மிட்டாய் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சிகளை நீங்கள் நம்புகிறீர்களா? இத்தகைய பொய்யர்களை நீங்கள் நம்புகிறீர்களா? பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

அந்த காலகட்டத்தில் நாட்டின் விவசாயிகளின் மொத்தக் கடன் ரூ.6 லட்சம் கோடியாகும். இதில் எவ்வளவு தொகை தள்ளுபடி செய்யப்பட்டது தெரியுமா? வெறும் 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. மேலும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையின்படி இத்தொகையில் ரூ.35 லட்சத்தை விவசாயிகளும் பெறவில்லை, கடன்களும் தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்த தொகை அவர்களின் பைகளில் சென்று சேர்ந்தது. கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளிலும் பல லட்சம் பேருக்கு அதற்கான சான்றிதழ் கிடைக்கவில்லை.

நண்பர்களே

கடன் தள்ளுபடிகளால் பயன்பெற்றவர்கள் யார்? கட்டாயம் விவசாயிகள் அல்ல. எனவே காங்கிரஸ் கட்சியின் பொய்யர்களையும், சதிகாரர்களையும் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சி 11 ஆண்டுகளுக்கு முன் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை ஏற்று விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை, உற்பத்தி செலவினத்தைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு கூடுதலாக நிர்ணயித்திருந்தால் விவசாயிகள் கடன் பெற்றிருக்கவே மாட்டார்கள். பி.ஜே.பி. அரசுதான் இந்தக் குழு சம்பந்தப்பட்ட கோப்பினை வெளியே எடுத்து 22 வகை பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உற்பத்தி செலவினத்தில் ஒன்றரை மடங்காக நிர்ணயித்தது.

சகோதர சகோதரிகளே

இன்று சிறிய விவசாயிகள் கூட வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சந்தைகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள், மிகப் பெரிய உணவுப் பூங்கா தொடர்கள் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் பயிர்களுக்கும், தொழில் துறையினருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை இந்த அரசு மேம்படுத்தி வருகிறது.

நண்பர்களே

கடந்த நான்கரை ஆண்டுகளில் ரயில்வே சம்பந்தப்பட்ட பல முக்கியத் திட்டங்கள் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு, இரட்டைப் பாதைகளை உருவாக்கப்பட்டு, ரயில் பாதைகள் மின்சாரமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல புதிய ரயில்கள் விடப்பட்டுள்ளன.

இந்த வசதிகள் அனைத்தையும் பெற்று இந்த மண்டலம் வர்த்தகம் மற்றும் வியாபாரத்தின் மையமாக விரைவில் மாற உள்ளது. புதிய வர்த்தகம் இந்தப் பகுதிக்கு வந்து சேரும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

நண்பர்களே

பிரதமர் வீட்டு வசதித் திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், உஜ்வாலா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், முத்ரா திட்டம், சவுபாக்யா திட்டம் ஆகியவை வெறும் திட்டங்கள் அல்ல, அதிகாரமளிப்பதற்கான வழிவகைகள். இவை அனைத்தும் குழந்தைகளுக்குக் கல்வி, .இளைஞர்களுக்கு வருமானம், முதியவர்களுக்கு மருந்துகள், விவசாயிகளுக்கு பாசன வசதி, மக்கள் குறைகளை தீர்த்தல் ஆகிய 5 அம்ச மேம்பாட்டின் முக்கிய பரிமாணங்கள்.

சகோதர சகோதரிகளே

எதிர்காலம் உங்களுடையது, உங்களின் குழந்தைகளுடையது, இளைய தலைமுறையைச் சார்ந்தது. உங்களது காவல்காரன் நேர்மையாகவும், மிகுந்த அக்கறையுடனும் ஒவ்வொரு நாளும் உழைத்து உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்க முயற்சியெடுத்து வருகிறான்.

இந்த புதிய மருத்துவக் கல்லூரி உருவாவது குறித்து உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஜா சுஹல்தேவ்-ன் பெரும் பங்களிப்புக்கு தலைவணங்கி, எனது உரையை முடிக்கிறேன். 2019 ஆம் ஆண்டு இரண்டு நாட்களில் பிறக்க உள்ளது. புத்தாண்டையொட்டி உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

இந்திய அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும்!

இந்திய அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும்!