Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாத்மா பூலே பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


மகாத்மா பூலே பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியதுடன், அவர் மனிதகுலத்தின் உண்மையான சேவகர் என்று பாராட்டியும் உள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி  வெளியிட்டுள்ள சமூக எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

மனித குலத்தின் உண்மையான சேவகரான மகாத்மா பூலே பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். சமூகத்தின் விளிம்புநிலை மற்றும் பின்தங்கிய மக்களின் நலனுக்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றியுள்ள விலைமதிப்பற்ற பங்களிப்பு ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பதாக உள்ளது.”

—-

(Release ID: 2120809)

TS/SV/KPG/RJ