Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாத்மா ஜோதிபா ஃபுலேயின் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை


மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிபா ஃபுலேயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பையும் திரு மோடி நினைவு கூர்ந்தார். மகாத்மா ஜோதிபா ஃபுலே பற்றிய தனது எண்ணங்களையும் ஒரு சிறிய வீடியோ மூலம் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;

“மகாத்மா ஃபுலே-யின் பிறந்தநாளில், நான் அவருக்கு தலைவணங்குகிறேன், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது எண்ணங்கள் கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கின்றன.”

***

AD/PKV/AG/KPG