Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவரை தலைவணங்கினார்


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

எக்ஸ் சமூக ஊடக பதிவொன்றில், பிரதமர் கூறியதாவது:

“காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியை தலைவணங்குகிறேன். காலத்தால் அழியாத அவரது போதனைகள், நம் பாதையை ஒளிரச் செய்கின்றன. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் ஒற்றுமை மற்றும் இரக்க உணர்வை மேம்படுத்த ஊக்குவிக்கும் மகாத்மா காந்தியின் தாக்கம், உலகளாவியது. அவரது கனவுகளை நனவாக்க நாம் தொடர்ந்து பாடுபடுவோம். தான் கனவு கண்ட மாற்றத்தின் காரணியாக ஒவ்வொரு இளைஞரும் இருக்கவும், எங்கும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கவும் மகாத்மாவின் சிந்தனைகள் உதவட்டும்.”

***

ANU/AP/RB/DL