ஹெராத் போஷ்தே பண்டிகையையொட்டி காஷ்மீர் பண்டிட்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில், அவர் எழுதியிருப்பதாவது:
” ஹெராத் போஷ்தே!
இந்தப் பண்டிகை நமது காஷ்மீர் பண்டிட் சகோதரிகள், சகோதரர்களின் துடிப்பான கலாச்சாரத்துடன் நெருக்கமான தொடர்புடையதாகும்.
இந்தப் புனிதமான தருணத்தில், அனைவரும் நல்லிணக்கம், சிறந்த ஆரோக்கியம் மற்றும் வளமையுடன் இருக்க வாழ்த்துகிறேன். இது அனைவரின் கனவுகளை நிறைவேற்றட்டும், புதிய வாய்ப்புகளை உருவாக்கட்டும், நீடித்த மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.”
***
TS/IR/AG/DL