நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடி உரையாற்றினார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த வாழை விவசாயியும் இந்த யாத்திரையின் பயனாளியுமான திரு தர்ம ராஜன், கிசான் கடன் அட்டை, பிரதமரின் விவசாயிகளுக்கான கெளரவ நிதி உதவித் திட்டம், உள்ளிட்ட பல திட்டங்களின் நன்மைகளைப் பெறுவது குறித்து பிரதமரிடம் தெரிவித்தார். முன்பை விட இத்தகைய சலுகைகள் கிடைப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து பிரதமரின் கேள்விக்கு பதிலளித்த தர்ம ராஜன், உரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் கிடைப்பது எளிதாகி இருக்கிறது என்று தெரிவித்தார்.
அரசுத் திட்டங்கள் மற்றும் கடன்கள் இந்த விவசாயியின் குடும்பத்திற்கு அதிக பணத்தை சேமிக்க உதவுகின்றன என்றும், இல்லையெனில் அவர் அதிக வட்டி விகிதங்களில் கடன் வாங்கி சிக்கலை சந்திக்க நேரிட்டிருக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தமது இரண்டு மகள்களின் கல்வி குறித்து பிரதமரிடம் தெரிவித்த திரு ராஜன், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் மூத்த மகளின் திருமணத்திற்காக பணத்தை சேமிக்க உதவிய அரசுத் திட்டங்களுக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
சிறந்த வாழ்க்கையை வழங்கியதற்காக பிரதமருக்கு திரு ராஜன் நன்றி தெரிவித்தார். திரு ராஜன் ஒரு முற்போக்கான விவசாயி என்றும், அவர் தமது மகள்களுக்கு கல்வி கற்பித்துள்ளதுடன் பணத்தை நன்றாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்ட பிரதமர், அவர் உண்மையிலேயே உத்வேகம் அளிப்பவர் என்று கூறினார்.
*******
ANU/PLM/DL