Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


7வது மகளிர் ஆசியக்  கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் ட்விட்டர் செய்தி ஒன்றிற்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது:

“எங்கள் மகளிர் கிரிக்கெட் அணியினர் அவர்களின் திறமை மற்றும் மனவுறுதியால் எங்களைப்  பெருமைப்படுத்தியுள்ளனர்! மகளிர் ஆசிய கோப்பையை வென்ற அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் சிறந்த திறமை மற்றும் அணி உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்துவரும் அவர்களின்  முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.”

*****

SMB/SRI/DHA