சிறந்த சிந்தனையாளரும், சமூக சீர்திருத்தவாதியும், தீவிர தேசியவாதியுமான மகரிஷி தயானந்த் சரஸ்வதியின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“சிறந்த சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தீவிர தேசியவாதி மகரிஷி தயானந்த் சரஸ்வதியின் பிறந்ததினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் ஆடம்பரத்திற்கு எதிராக சமூகத்துக்கு விழிப்புணர்வூட்டுவதில் அவர் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டார். இந்தியப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்ததோடு, கல்வி, மகளிருக்கு அதிகாரமளித்தலுக்கான அவரது முயற்சிகள் என்றும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
***
(Release ID: 2102207)
TS/IR/AG/KR
महान चिंतक, समाज सुधारक और प्रखर राष्ट्रवादी महर्षि दयानंद सरस्वती जी को उनकी जन्म-जयंती पर कोटि-कोटि नमन। वे जीवनपर्यंत समाज को अज्ञानता, अंधविश्वास और आडंबर के खिलाफ जागरूक करने में जुटे रहे। शिक्षा और महिला सशक्तिकरण के साथ-साथ भारतीय विरासत और संस्कृति के संरक्षण के लिए उनके…
— Narendra Modi (@narendramodi) February 12, 2025