Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகப்பேறு பயன் சட்டம் 1961- திருத்தம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை, மகப்பேறு பயன் சட்டம், 1961-க்கான திருத்தங்களை, நாடாளுமன்றத்தில் மகப்பேறு பயன் (திருத்தம்) மசோதா, 2016 என அறிமுகப்படுத்தியதற்கான தனது பின்னேற்பு ஒப்புதலை அளித்தது.

மகப்பேறு பயன் சட்டம், 1961 பணிபுரியும் பெண்களின் மகப்பேறு காலத்தில் பாதுகாப்பு அளிப்பதுடன், அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதற்காக ‘மகப்பேறு பயன்’ – முழுஊதியத்துடன் கூடிய விடுப்பு – பெற உரிமையளிக்கிறது. இச்சட்டம் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்ட நிறுவனங்களுக்கு பொருந்தும். இத்திருத்தங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட பிரிவில் பணியாற்றும் 1.8 மில்லியன் (ஏறத்தாழ) பெண் தொழிலாளர்கள் பயன் பெற உதவும்.

மகப்பேறு பயன் சட்டம், 1961-க்கான திருத்தங்கள் கீழ்க்கண்டவாறு:

• மகப்பேறு பயன், இரண்டு உயிருடன் உள்ள குழந்தைகளுக்காக 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாகவும், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 12 வாரங்களாகவும் உயர்த்தப்படுகிறது.

• ‘சுமக்கும் தாய்’ மற்றும் ‘தத்துத் தாய்’ ஆகியோருக்கு 12 வார மகப்பேறு பயன்

• ‘வீட்டிலிருந்தே பணியாற்றும் வசதி’ ஏற்படுத்துதல்

• 50 மற்றும் அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் கண்டிப்பாக குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்த வேண்டும்.

நியாயங்கள்:

• குழந்தைப் பருவத்தில் குழந்தைக்கான தாய் அன்பு – குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமாகும்.

• 44வது, 45வது மற்றும் 46வது இந்திய தொழிலாளர் மாநாடு மகப்பேறு பயன்களை 24 வாரங்களாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.

• மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மகப்பேறு பயனை 8 மாதங்களாக உயர்த்தவுள்ளது.

• முத்தரப்பு ஆலோசனைகளின்போது, அனைத்து பங்கேற்பாளர்களும் பொதுவாக இத்திருத்த முன்மொழிவிற்கு ஆதரவளித்துள்ளனர்.