போர்த்துக்கல்லுக்கு வரலாற்றுப்பூர்வமான பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு.நரேந்திர மோடி, லிஸ்பன் நகரில் இந்திய சமூகத்தினரை சந்தித்தார். அப்போது, அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்கள் மத்தியில் உரையாற்றிய திரு. நரேந்திர மோடி, இந்தியா-போர்த்துக்கல் இடையேயான நட்புறவின் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.
போர்த்துக்கல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டரேஸுடனான சந்திப்பு குறித்தும் எடுத்துரைத்தார். யோகா குறித்தும், அதன்மூலம் கிடைக்கும் சுகாதாரப் பலன்கள் குறித்தும் பிரதமர் பேசினார். யோகா குறித்த செய்தியை பரப்புவதற்கு போர்த்துக்கல் ஆற்றிவரும் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.
உலகில் அதிவேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தற்போது இருப்பதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகளின் பங்களிப்பை பாராட்டிய திரு.மோடி, “விண்வெளித் துறையில், நமது விஞ்ஞானிகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அண்மையில், 30 சிறிய (nano) செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளனர்,” என்று கூறினார்.
முன்னதாக, போர்த்துக்கல்லில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பொதுமக்கள் உயிரிழந்ததற்கு தனது வருத்தத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.
மேலும், போர்த்துக்கீசிய பிரதமர் அன்டோனியோ கோஸ்டா-வுக்கு வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கினார்.
At the Comunidade Hindu de Portugal, a temple in Lisbon. pic.twitter.com/N6bxiEsb4b
— Narendra Modi (@narendramodi) June 24, 2017
Had a delightful interaction with the Indian community of Portugal. https://t.co/jZdDkC6CL7
— Narendra Modi (@narendramodi) June 24, 2017