Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போர்ச்சுகல் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

போர்ச்சுகல் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, போர்ச்சுகீசிய குடியரசு பிரதமர் திரு. லூயிஸ் மாண்டிநீக்ரோவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். 2024 ஏப்ரலில் பிரதமராக மாண்டிநீக்ரோ பிரதமர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மாண்டிநீக்ரோ வாழ்த்து தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து தலைவர்கள் விவாதித்தனர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் நகர்வு போன்ற புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அவர்கள் சுட்டிக் காட்டினர். பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் உட்பட பரஸ்பர நலன்களின் உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பிராந்திய மற்றும் பலதரப்பு அமைப்புகளில் தற்போதுள்ள நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இந்தியா மற்றும் போர்ச்சுக்கல் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் வரும் 2025-இல் நிறைவடைவதை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். இந்த நிகழ்வை கூட்டாக பொருத்தமான முறையில் கொண்டாட அவர்கள் ஒப்புக்கொண்டனர். இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கவும் ஒப்புக்கொண்டனர்.

***

(Release ID: 2074439)
TS/PKV/RR/KR