Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போடோ சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும், போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மத்தியிலும் அசாமிலும் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது உழைத்து வருகின்றன – இந்தப் பணிகள் மேலும் வீரியத்துடன் தொடரும்: பிரதமர்


 

கோக்ராஜரில் 2025 பிப்ரவரி 17 அன்று நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

போடோ சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும், போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மத்தியிலும் அசாமிலும் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது உழைத்து வருவதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தப் பணிகள் இன்னும் வீரியத்துடன் தொடரும் இன்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

கோக்ரஜாரில் நடைபெறவுள்ள ஒரு நாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் குறித்து அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் அறிவிப்பு குறித்த சமூக வலைதள பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

போடோ சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும், போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மத்தியிலும் அசாமியிலும் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் அயராது உழைத்து வருகின்றன. இந்தப் பணிகள் இன்னும் வீரியத்துடன் தொடரும்.

கோக்ராஜருக்கு நான் சென்றபோது நான் கண்ட துடிப்பான போடோ கலாச்சாரத்தை அன்புடன் நினைவு கூர்கிறேன்.”

***

PLM/KV