Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போடோபா உபேந்திரநாத் பிரம்மாவை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்ந்த பிரதமர்


போடோபா உபேந்திரநாத் பிரம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். போடோபா உபேந்திரநாத் பிரம்மாவின் வாழ்க்கை மக்கள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்திய அரசும்அசாம் அரசும் அவரது கனவுகளை நனவாக்கவும், அற்புதமான போடோ மக்களுக்கு அதிகாரமளிப்பதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

அசாம் முதல்வர் திரு. ஹிமந்த பிஸ்வா சர்மாவின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், “போடோபா உபேந்திரநாத் பிரம்மாவின் வாழ்க்கை மக்கள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவரது பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம். இந்திய அரசும், அசாம் அரசும் அவரது கனவுகளை நனவாக்கவும், அற்புதமான போடோ மக்களுக்கு அதிகாரமளிக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

**********

AD/CR/DL