Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போக்குவரத்து கல்வியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்திய – ரஷ்யக் கூட்டமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் விவரம் மத்திய அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது


ரஷ்யாவுடன் 5.10.2018 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்த விவரம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது.

  1. போக்குவரத்து கல்வியில் ஒத்துழைப்பு மேம்பாட்டிற்காக ரஷ்யக் கூட்டமைப்பின் போக்குவரத்து அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  2. ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக ரஷ்ய ரயில்வேயின் கூட்டு நிறுவனத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம்.

ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால வளர்ச்சி மற்றும் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளவும், கலந்துரையாடவும் இந்திய ரயில்வேக்கு இடமளிப்பவை இந்த ஒப்பந்தங்கள். தொழில்நுட்ப வல்லுனர்கள், அறிக்கைகள், தொழில்நுட்ப ஆவணங்கள் ஆகியவற்றை பரிமாறிக்கொள்ளவும் குறிப்பிட்ட தொழில்நுட்பம் குறித்த பயிற்சி கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்தவும், அறிவு பகிர்வுக்கான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.

                                                          *****