Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பொழுதுபோக்கு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத்தை ஒன்றிணைக்கும் உலகளாவிய உச்சிமாநாடான வேவ்ஸ்  ஆலோசனைக் குழுவின் விரிவான கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

பொழுதுபோக்கு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத்தை ஒன்றிணைக்கும் உலகளாவிய உச்சிமாநாடான வேவ்ஸ்  ஆலோசனைக் குழுவின் விரிவான கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி  மூலம் வேவ்ஸ்  ஆலோசனைக் குழுவின் விரிவான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வேவ்ஸ்  என்பது பொழுதுபோக்கு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய உச்சிமாநாடு ஆகும்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  அவர் கூறியிருப்பதாவது:
“பொழுதுபோக்கு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சார உலகத்தை ஒன்றிணைக்கும் உலகளாவிய உச்சிமாநாடான வேவ்ஸ் ஆலோசனைக் குழுவின் விரிவான கூட்டம் சமீபத்தில் முடிந்தது. ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நபர்கள்,  தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதுடன்  மட்டுமல்லாமல், இந்தியாவை உலகளாவிய பொழுதுபோக்கு மையமாக மாற்றுவதற்கான நமது முயற்சிகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த மதிப்புமிக்க உள்ளீடுகளையும் பகிர்ந்து கொண்டனர்.”

************  

PKV/KV