Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பொருளாதார வல்லுநர் நிக்கோலஸ் ஸ்டெர்னுடன் பிரதமர் சந்திப்பு


லண்டன் பொருளியல் பள்ளியின் பொருளாதார பேராசிரியர் லார்டு நிக்கோலஸ் ஸ்டெர்னை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். பலதரப்பு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

லார்டு நிக்கோலஸ் ஸ்டெர்னின் ட்விட்டர் செய்திக்குப் பதிலளித்த பிரதமர், “லார்டு ஸ்டெர்னை @lordstern1 சந்தித்து, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழல் மீதான அவரது ஈடுபாடு மற்றும் கொள்கை சம்பந்தமான விஷயங்களில் அவரது நுட்பமான புரிதல் பிரமிக்க வைக்கிறது. இந்தியா பற்றி அவர் நேர்மறையான எண்ணங்கள் கொண்டிருப்பத்துடன், 130 கோடி இந்தியர்களின் திறமைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்”, என்று கூறினார்.