Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சட்ட சேவைகள் முகாமில் ஜார்போம் கேம்லின் சட்டக் கல்லூரி மாணவர்கள் வழங்கிய ஆக்கப்பூர்வமான தீவிர பங்களிப்புக்குப் பிரதமர் பாராட்டு


பொதுமக்களிடையே சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சட்ட சேவைகள் முகாமில் ஜர்போம் கேம்லின் சட்டக் கல்லூரி மாணவர்கள், ஆக்கப்பூர்வமான தீவிர பங்களிப்பை வழங்கியதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி மாணவர்களின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

 

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜுஜுவின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது:

 

“இதுபோன்ற முயற்சி பாராட்டுக்குரியவை. ஏனெனில் சட்டம் மற்றும் மக்களின் சட்ட உரிமைகள் தொடர்பான அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வை இத்தகைய முயற்சிகள் மேம்படுத்தும்.”

 

இவ்வாறு பிரதமர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

 

***

AP/PLM/DL