Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெல்ஜியம் மன்னர் திரு ஃபிலிப்புடன் பிரதமர் பேச்சு


பெல்ஜியம் நாட்டு மன்னர் மேதகு திரு ஃபிலிப்புடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாடினார். இளவரசி ஆஸ்ட்ரிட் தலைமையிலான இந்தியாவுக்கான பெல்ஜியம் பொருளாதார இயக்கத்திற்கு திரு மோடி பாராட்டு தெரிவித்தார். வலுவான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது, வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது, கண்டுபிடிப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தள

பதிவில் அவர் கூறியதாவது:

“பெல்ஜியம் மன்னர் திரு ஃபிலிப்புடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. இளவரசி ஆஸ்ட்ரிட் தலைமையிலான இந்தியாவுக்கான பெல்ஜியம் பொருளாதார இயக்கத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நமது வலுவான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது, வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது, கண்டுபிடிப்பு மற்றும் நிலைத்தன்மையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து  விவாதித்தோம்.

@MonarchieBe”    

 

***

RB/DL