மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் எழுதிய பெண்களை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு என்ற கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். “அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதைத் தவிர, புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவியாக உள்ளது” என்று திரு மோடி கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவு வருமாறு;
“நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவின் பங்கை எடுத்துரைத்து, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர், இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவியாக இருக்கும் என்று எழுதியுள்ளார். நமது மகளிர் சக்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது கட்டுரையைப் படியுங்கள்…”
*****
PKV /DL
महिला एवं बाल विकास राज्यमंत्री @savitrii4bjp जी ने हमारी माताओं-बहनों-बेटियों को सशक्त बनाने में AI की भूमिका पर प्रकाश डालते हुए लिखा है कि यह उनके लिए बेहद उपयोगी होने के साथ-साथ नए-नए अवसरों के सृजन में भी मददगार है। पढ़िए, हमारी नारीशक्ति को समर्पित उनका यह आलेख… https://t.co/rldMBGAWRA
— PMO India (@PMOIndia) March 9, 2025