Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெண்களுக்கான 50 கிலோ குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிகட் ஜரினுக்கு பிரதமர் வாழ்த்து


காமன்வெல்த் போட்டிகள், 2022-இன் பெண்களுக்கான 50 கிலோ குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிகட் ஜரினுக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:

“நிகட் ஜரின், இந்தியாவின் பெருமை. தமது திறமைக்காக பாராட்டப்படும் உலகத் தரம் வாய்ந்த தடகள வீராங்கனை, அவர். காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அவருக்கு எனது வாழ்த்துகள். ஏராளமான போட்டிகளில் திறமையாக விளையாடி, அபாரமான நிலைத்தன்மையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள். #Cheer4India”

*****

(Release ID: 1849494)