பெங்களூருவில் ரு.27,000 கோடி மதிப்பிலான பல்முனை ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். முன்னதாக, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பக்ஷி பார்த்தசாரதி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தையும், பாரத ரத்னா டாக்டர் பி ஆர் அம்பேகர் சிலையையும் அவர் திறந்துவைத்தார். தொழில்நுட்ப கேந்திரங்களாக மாற்றப்பட்ட 105 தொழில் பயிற்சி நிறுவனங்கள், அர்ப்பணித்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் திரு. தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் திரு. பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கர்நாடகாவில் ஐந்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், 7 ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது மற்றும் கொங்கன் ரயில்வே பாதை 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டது மகத்துவமானது என்று குறிப்பிட்டார். இந்த அனைத்து திட்டங்களும் கர்நாடகாவில் இளைஞர்கள், நடுத்தர மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு புதிய வசதியை அளிக்கும் என்று கூறினார்.
நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு நகரமாக பெங்களூரு திகழ்கிறது என்றும் ஒரே பாரதம் – உன்னத பாரதம் என்பதை இந்நகரம் பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். பெங்களூருக்கான வளர்ச்சி மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால்தான் கடந்த 8 வருடங்களாக பெங்களூரு வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து செயலாற்றி வந்தது.
ரயில், சாலை, மெட்ரோ, சுரங்கப்பாதை, மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் மூலம் போக்குவரத்து நெரிசலிலிருந்து பெங்களூரு மீள முடியும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அனைத்து வழிகளிலும் அதனை வலுப்படுத்த பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். பெங்களூருவின் புறநகர் பகுதிகளை சிறந்த போக்குவரத்து அமைப்புடன் இணைப்பதற்கு தமது அரசு உறுதிபூண்டுள்ளதாகக் கூறினார். கடந்த 40 ஆண்டுகளாக இதுபற்றி பேசப்பட்டு வந்தாலும், மத்திய, மாநில அரசுகள் மூலம் மக்கள் இதனை நிறைவேற்ற வாய்ப்பளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த 40 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த பெங்களூரு மக்களின் கனவை அடுத்த 40 மாதங்களில் நிறைவேற்றுவதற்கு நான் கடினமாகப் பணியாற்றுவேன் என்று பிரதமர் உறுதியளித்தார்.
பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்தின் மூலம் பெங்களூரு நகரம் புறநகருடன் இணைக்கப்படும் என்று பிரதமர் கூறினார். அதேபோல், பெங்களூரு சுற்றுவழிச்சாலை திட்டத்தின் மூலம் நகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று குறிப்பிட்டார்.
கடந்த 8 ஆண்டுகளில் ரயில் போக்குவரத்தில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தியன் ரயில்வே விரைவாகவும், தூய்மையாகவும், நவீனமாகவும், பாதுகாப்பாகவும், குடிமக்களுக்கு உகந்ததாகவும் மாறியுள்ளது அவர் கூறினார். நாட்டில் நினைத்துப் பார்க்க முடியாத பகுதிகளில் கூட நாம் ரயில் போக்குவரத்தை செயல்படுத்தி வருகிறோம் என்று கூறினார். விமான நிலையங்களில் மட்டும் காணப்படும் வசதிகளை ரயில் நிலையங்களிலும் ஏற்படுத்துவதற்கு இந்திய ரயில்வே முயற்சித்து வருவதாகக் கூறினார். பாரத ரத்னா எம்.விஸ்வேஸ்வரய்யா என்று பெயரிடப்பட்டுள்ள பெங்களூரு நவீன ரயில் நிலையம் இதற்கு நேரடி எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைந்த பன்னோக்கு போக்குவரத்தின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார். பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் மூலம் இது புதிய உத்வேகம் பெற்று வருவதாக அவர் கூறினார். விரைவில் அமைக்கப்பட உள்ள பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து பூங்கா இத்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு அங்கமாகும் என்றார். விரைவு சக்தி திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு இது வலு சேர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு வசதிகளை ஏற்படுத்தினால் இந்திய இளைஞர்களால் எப்படி செயலாற்ற முடியும் என்பதை பெங்களூரு நகரம் எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், குடிமக்களின் வாழ்க்கை தரத்தில் உள்ள இடர்பாடுகள் குறைந்துள்ளதாகவும் கூறினார். நாட்டில் உள்ள இளைஞர்களின் கனவு நகரமாக பெங்களூரு திகழ்கிறது என்றும், அதற்கு பின்னணியாக தொழில்முனைவோர், புதிய கண்டுபிடிப்புகள், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளை முறையாக உபயோகித்தது காரணம் என்றும் தெரிவித்தார். 21-ம் நூற்றாண்டில் இந்தியா வேலைவாய்ப்பு உருவாக்குபவர்களையும், புதிய கண்டுபிடிப்பாளர்களையும் கொண்டது என்று அவர் கூறினார். உலகில் இளைஞர்கள் மிகுந்த நாடாக இந்தியா இருப்பதே அதன் செல்வமும், வலிமையும் ஆகும் என்று குறிப்பிட்டார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம் சிறு–குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் வளர்ச்சிக் காணப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். சுயசார்பு இந்தியா இயக்கத்தின் நம்பிக்கையின் அடையாளமாக, 200 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தங்களில் வெளிநாட்டு பங்களிப்பை இந்தியா விலக்கியுள்ளது. சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து 25 சதவீதம் வரை மத்திய அரசு நிறுவனங்கள் மின்னணு கொள்முதல் இணையதளங்கள் வாயிலாக பொருட்களை கொள்முதல் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஸ்டார்ட் அப் துறை குறித்து குறிப்பிட்ட பிரதமர், கடந்த 8 வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புதிய நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். முதல் 10 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கு 800 நாட்கள் ஆகிய நிலையில், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 200 நாட்களுக்குள்ளாகவே பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில் யூனிகான் நிறுவனங்களின் மதிப்பு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் என்றும் அவர் கூறினார்.
அரசோ அல்லது தனியாரோ, இரண்டுமே நாட்டின் சொத்துக்கள், எனவே அனைவருக்கும் சமமான பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன் என்று பிரதமர் தெரிவித்தார். அரசு அளித்து வரும் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். கடினமாக உழைக்கும் இளைஞர்களுக்கு அரசு சிறந்த வாய்ப்பை அளிப்பதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835553
*********
Delighted to be in Bengaluru. Speaking at a public meeting. https://t.co/epNMla6flf
— Narendra Modi (@narendramodi) June 20, 2022
कर्नाटका में 5 नेशनल हाईवे प्रोजेक्ट्स, 7 रेलवे प्रोजेक्ट्स का शिलान्यास किया गया है।
— PMO India (@PMOIndia) June 20, 2022
कोंकण रेलवे के शतप्रतिशत बिजलीकरण के महत्वपूर्ण पड़ाव के हम साक्षी बने हैं।
ये सभी प्रोजेक्ट कर्नाटका के युवाओं, मध्यम वर्ग, किसानों, श्रमिकों, उद्यमियों को नई सुविधा देंगे, नए अवसर देंगे: PM
बैंगलुरू, देश के लाखों युवाओं के लिए सपनों का शहर है।
— PMO India (@PMOIndia) June 20, 2022
बैंगलुरू, एक भारत-श्रेष्ठ भारत की भावना का प्रतिबिंब है।
बैंगलुरु का विकास, लाखों सपनों का विकास है।
इसलिए बीते 8 वर्षों में केंद्र सरकार का ये निरंतर प्रयास रहा है कि बैंगलुरू के सामर्थ्य को और बढ़ाया जाए: PM
बैंगलुरू को जाम से मुक्ति दिलाने के लिए रेल, रोड, मेट्रो, अंडरपास, फ्लाईओवर, हर संभव माध्यमों पर डबल इंजन की सरकार काम कर रही है।
— PMO India (@PMOIndia) June 20, 2022
बैंगलुरू के जो suburban इलाके हैं, उनको भी बेहतर कनेक्टिविटी से जोड़ने के लिए हमारी सरकार प्रतिबद्ध है: PM @narendramodi
भारतीय रेल अब तेज़ भी हो रही है, स्वच्छ भी हो रही है, आधुनिक भी हो रही है, सुरक्षित भी हो रही है और citizen friendly भी बन रही है।
— PMO India (@PMOIndia) June 20, 2022
हमने देश के उन हिस्सों में भी रेल को पहुंचाया है, जहां इसके बारे में कभी सोचना भी मुश्किल था: PM @narendramodi
भारतीय रेल अब वो सुविधाएं, वो माहौल भी देने का प्रयास कर रही है जो कभी एयरपोर्ट्स और हवाई यात्रा में ही मिला करती थीं।
— PMO India (@PMOIndia) June 20, 2022
भारत रत्न सर एम. विश्वेश्वरैया के नाम पर बैंगलुरू में बना आधुनिक रेलवे स्टेशन भी इसका प्रत्यक्ष प्रमाण है: PM @narendramodi
बैंगलुरू ने ये दिखाया है कि सरकार अगर सुविधाएं दे और नागरिक के जीवन में कम से कम दखल दे, तो भारतीय युवा क्या कुछ नहीं कर सकते हैं।
— PMO India (@PMOIndia) June 20, 2022
बैंगलुरू, देश के युवाओं के सपनों का शहर है और इसके पीछे उद्यमशीलता है, इनोवेशन है, पब्लिक के साथ ही प्राइवेट सेक्टर की सही उपयोगिता है: PM
बीते दशकों में देश में कितनी बिलियन डॉलर कंपनियां बनी हैं, आप उंगलियों पर गिन सकते हैं।
— PMO India (@PMOIndia) June 20, 2022
लेकिन पिछले 8 साल में 100 से अधिक बिलियन डॉलर कंपनियां खड़ी हुई हैं, जिसमें हर महीने नई कंपनियां जुड़ रही हैं: PM @narendramodi
मेरा साफ मानना है, उपक्रम चाहे सरकारी हो या फिर प्राइवेट, दोनों देश के asset हैं, इसलिए level playing field सबको बराबर मिलना चाहिए।
— PMO India (@PMOIndia) June 20, 2022
यही सबका प्रयास है: PM @narendramodi