Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக்கை பிரதமர் சந்தித்தார்

பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக்கை பிரதமர் சந்தித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி  பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக்கை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.

இந்தியா-பூட்டான் இடையேயான தனித்துவமான நெருங்கிய நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்த  பல்வேறு கருத்துக்கள் தொடர்பாக, இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியா – பூட்டான் இடையேயான நட்புறவை சீராக்குவது தொடர்பான தொலைநோக்கு வழிகாட்டுதலை அளித்தமைக்காக, திரு மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“பூட்டான் மன்னருடன் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. இந்தியா-பூட்டான் இடையேயான தனித்துவமான நெருங்கிய நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்த  பல்வேறு கருத்துக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நம்முடைய நட்புறவை சீராக்குவது தொடர்பான தொலைநோக்கு வழிகாட்டுதலை அளித்த அவருக்கு எனது பாராட்டை தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

——————