Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பூட்டானில் புனாட்சங்ச்சு II நீர் மின்சக்தி திட்டத்துக்கான மாற்றியமைக்கப்பட்ட செலவின் மதிப்பீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை பூட்டானில் 1,020 மெகாவாட் திறன் கொண்ட புனாட்சங்ச்சு II நீர் மின்சக்தி திட்டத்துக்கான ரூ. 7,290.62 கோடியாக மாற்றியமைக்கப்பட்ட செலவின மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் இந்த்த் திட்டத்திற்கான செலவின உயர்வு ரூ. 3,512.82 கோடியாகும்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் உபரி மின்சக்தி இந்தியாவுக்கு வழங்கப்படும். இதனால் நாட்டிற்க கிடைக்கும் மின்சார அளவு உயரும். இதனை அடுத்து திட்டப் பணிகள் தடையின்றி முன்னேற வாய்ப்புகள் ஏற்படும்.

பின்னணி:

2010 ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையே புனாட்சங்ச்சு II நீர் மின்சக்தி திட்டத்தை செயல்படுத்த இருதரப்பு ஒப்பந்தம் ரூ. 3,777.8 கோடி மதிப்பீட்டில் (2009 மார்ச் விலைகள் அடிப்படையில்) ஏற்பட்டது. இதில் இந்திய அரசு 30 சதவீதத்தை மானியமாகவும் 70 சதவீதத்தை கடனாகவும் வழங்கும். கடன் தொகைக்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டியுடன் 30 சமமான 6 மாதகால தவணைகளில் செலுத்தப்பட வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டது.

மதிப்பீட்டு செலவின உயர்வு 2009 மார்ச் முதல் 2015 மார்ச் வரை ஏற்பட்ட பணவீக்கம் காரணமானதாகும். மேலும் தரை நிலை மின் உற்பத்தி நிலையத்திற்கு பதிலாக நிலத்தடி உற்பத்தி நிலையம் அமைத்தல், உற்பத்தி திறனை 990 மெகாவாட்டிலிருந்து 1,020 மெகாவாட்டாக உயர்த்துதல், பூட்டான் தேசிய மின்கட்டமைப்பு பெருந்திட்டத்தின் கூடுதல் தேவைகள், திட்ட அமலாக்கத்தின் போது ஏற்பட்ட எதிர்மறையான புவியியல் நிலைமைகள் ஆகியனவும் திட்டச் செலவின மதிப்பீடு உயர்வதற்கு காரணங்களாகும்.