Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பூடான் பிரதமருடன் பிரதமர் நடத்திய இருதரப்பு சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின


பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேயை திம்புவில் இன்று (22-03-2024) பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். பிரதமரை கெளரவிக்கும் வகையில் பூடான் பிரதமர் மதிய விருந்து அளித்தார். பாரோ-விலிருந்து திம்பு வரையில் பிரதமர் திரு நரேந்திர மோடியின்  பயணம் முழுவதும் மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்காக பூடான் பிரதமர் டோப்கேவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம், இளைஞர் பரிமாற்றம், சுற்றுச்சூழல், வனம், சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவும் பூடானும் அனைத்து நிலைகளிலும் மிகுந்த நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றைக் கொண்ட நீண்டகால மற்றும் சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளன.

இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் இணைப்பு, விண்வெளி, விவசாயம், இளைஞர் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரத்தை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://bit.ly/3xa8U7y

 

SM/PKV/PLM/KRS