பூஜ்ய சந்த் ஸ்ரீ சேவாலால் மகராஜின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மதிப்பிற்குரிய துறவி ஸ்ரீ சேவாலால் மகராஜ் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நான் அவருக்கு தலை வணங்குகிறேன். அவர் தமது முழு வாழ்க்கையையும் ஏழைகள், பின்தங்கியவர்களின் நலனுக்காக அர்ப்பணித்தார். தன்னால் இயன்றவரை சமூக அநீதிகளுக்கு எதிராக அயராது போராடினார். மகராஜ் அவர்கள் சமத்துவம், நல்லெண்ணம், அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை ஆகிய விழுமியங்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது செய்திகள் சமூகத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் இரக்கமுள்ள வாழ்க்கையை வாழ ஊக்கமளித்துள்ளன. நல்லிணக்கமான, அர்ப்பணிப்புள்ள சமூகத்தை உருவாக்க அவரது எண்ணங்கள் எப்போதும் நமக்கு வழிகாட்டும்.
ஜெய் சேவா லால்!”
***
PLM/KV
पूज्य संत श्री सेवालाल महाराज जी की जयंती पर उन्हें मेरा शत-शत नमन! उन्होंने अपना पूरा जीवन गरीबों और वंचितों के कल्याण के लिए समर्पित कर दिया। अपनी पूरी क्षमता के साथ उन्होंने निरंतर सामाजिक अन्याय के खिलाफ लड़ाई लड़ी। समानता, सद्भावना, भक्ति और निस्वार्थ सेवा के मूल्यों के… pic.twitter.com/477ZMWmIKd
— Narendra Modi (@narendramodi) February 15, 2025