Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புவனேஸ்வர், பிஜு பட்நாயக் விமானநிலையத்தில் உள்ள சாலையை அகலப்படுத்துவதற்காக இந்திய விமானநிலையங்கள் ஆணைக் குழு மற்றும் ஒடிசா அரசுக்கு இடையே நிலபரிமாற்றத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ஒடிசா அரசு அளித்த 1.6 ஏக்கர் நிலத்திற்கு இணையாக இந்திய விமானநிலையங்கள் ஆணைக் குழுவின் (ஏ.ஏ.ஐ.) 1.6 ஏக்கர் நிலத்தை பரிமாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய விமான நிலையங்கள் ஆணைக் குழுவின் 1.6 ஏக்கர் நிலத்திற்கு மாற்றாக மாநில 1.6 ஏக்கர் நிலம் அளிக்க முன்வந்துள்ளதோடு, அந்நிலத்தில் இந்திய விமானநிலையங்கள் ஆணைக் குழுவிற்கு சொந்தமான தற்போதைய உட்கட்டமைப்புகளை தனது சொந்த செலவில் மாற்றி வைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், மாநில அரசு அளித்துள்ள இடம், தற்போதுள்ள விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது. அதனை இணை ஊர்தி சாலை அமைக்க இந்திய விமானநிலையங்கள் ஆணைக் குழு, பயன்படுத்திக் கொள்ளும். இந்த நிலபரிமாற்றம் மாநில அரசு மற்றும் இந்திய விமானநிலையங்கள் ஆணைக் குழு மட்டும் பயன் அளிப்பதோடு, மக்களுக்கும் பயன் அளிக்கும்.

ஒதிசா அரசு, புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மாநில அரசுக்கு சொந்தமான சாலையை (ஏக்மாரா மார்க்/பாலாஷ்பள்ளி சாலை என அழைக்கப்படும்) முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பாதுகாப்பான பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்த உள்ளது. இதற்காக இந்திய விமானநிலையங்கள் ஆணைக் குழுவிற்கு சொந்தமான 1.6 ஏக்கர் நிலம் மாநில அரசிற்கு தேவைப்பட்டது.