Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புளூம்பர்க் இந்தியா பொருளாதார மாநாடு – 2016 ல் பிரதமரின் உரை

புளூம்பர்க் இந்தியா பொருளாதார மாநாடு – 2016 ல் பிரதமரின் உரை


திரு மிக்லெட்த்வெயிட்,

அன்பார்ந்த விருந்தினர்

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே,

இந்தியாவில் புளூம்பர்க்கின் இருபது ஆண்டு செயல்பாட்டை குறக்கும் வகையில் நான் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் காலக்கட்டத்தில் புளூம்பர்க் இந்தியாவின் பொருளாதரம் குறித்து சிறந்த மதிப்பீடுகளை அளித்துள்ளது. நிதித் துறையில் இது ஒரு அத்தியாவசியப் பகுதியாக ஆகியுள்ளது.

இது தவிர அதிநவீன நகரங்கள் திட்டத்தை வடிவமைத்ததில் திரு. மைக்கேல் புளூம்பர்க்கிடமிருந்து பெற்ற மதிப்புமிகு ஆலோசனைக்காக நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் பெரு நகரங்களில் ஒன்றின் மேயராக இருந்துள்ள திரு, புளூம்பர்க் தனிப்பட்ட முறையில் ஒரு நகரம் எதைப் பெற வேண்டும் என்பதில் கண்ணோட்டம் கொண்டவர். நமது அதிநவீன நகரங்கள் திட்டத்தை வடிவமைப்பதில் அவரது சிந்தனைகள் செறிவூட்டியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாங்கள் நாடு முழுவதும் நகர்ப்புற மேம்பாட்டுக்கான மாதிரிகளாக திகழக்கூடிய 100 நகரங்களை உருவாக்க விரும்புகிறோம்.

உலகளாவிய வளர்ச்சிக்கு நன்கொடை அளிப்பதன் மூலம் இந்தியா அதிகளவு அளிக்க வேண்டும் என உலகம் எதிர்பார்க்கிறது. காலம் அனுமதிக்கும் வகையில், உங்கள் முன்னிலையில் இது தொடர்பாக எனது சிந்தனைகள் உங்கள் முன வைத்து இந்த சவாலை எப்படி இந்தியா எதிர்கொள்ளும் என்பது பற்றி தெரிவிக்க உள்ளேன்.,

மூன்று பெரிய பகுதிகள் குறித்து நான் குறிப்பிடுகிறேன். முதலாவது, நான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து விவாதிக்கிறேன். இரண்டாவதாக நான் வளர்ச்சியை உருவாக்கி அதனை நீடிக்கச் செய்யும் சில நிர்வாக மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் குறித்து வெளிப்படுத்துவேன். மூன்றாவதாக பொருளாதார வளர்ச்சியின் ஒரு அம்சமான வேலை உருவாக்கத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துக் கூறுவேன்.

உலகின் பிரகாசமான பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது என்பதை நிபுணர்கள் அனைவரும் ஏற்பார்கள். குறைந்த பணவீக்கம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை செலுத்துவதில் சமநிலை, உயர் வளர்ச்சி விகிதம் ஆகியவை எங்களிடம் உள்ளன. இது சிறந்த கொள்கையின் விளைவாகும், நல்ல அதிர்ஷ்டம் காரணமாக இல்லை. இது பற்றி விரிவாக கூறுகிறேன் :
2008 மற்றும் 2009 க்கு இடையே கச்சா எண்ணெயின் நிலை மிக உயர்வான நிலையில் இருந்த ஒரு பேரல் 147 டாலர் என்ற விலையில் இருந்து 50 டாலர் அளவுக்கு குறைந்தது. 2014 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை விட இது அதிகமானது. இருந்த போதிலும் 2009-2010ல் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை, அதன் நடப்பு கணக்கு பற்றாக்குறை, அதன் பணவீக்க விகிதம், அனைத்தும் மிக மோசமாக இருந்தது. இந்த இறக்கம் இந்த மூன்றுக்கும் உயர்வான அடித்தளத்திலிருந்து மூன்றுக்குமு ஏற்பட்டது. ஆனால் 2015-16ல் மூன்றும் குறைவான அடித்தளத்திலிருந்து மேம்பாடு அடைந்துள்ளது.

பல்வேறு வளரும் பொருளாதாரங்களும் இறக்குமதி செய்யப்படட எண்ணையை சார்ந்தே உள்ளது. இந்த நாடுகளின் வெற்றிக்கு ஊக்க சக்தியாக எண்ணெய் விலைதான் அமைகிறது என்றால் அந்த நாடுகளும் இதே போன்ற முடிவுகளைத் தான் பெற்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

உலகளாவிய வர்த்தகம் அல்லது வளர்ச்சி நமது அதிர்ஷ்டமாக அமையவில்லை. அவை இரண்டு குறைவாக இருப்பதால் அவை நமக்கு ஏற்றுமதி ஊக்கம் அடிப்படையில் உதவி செய்யவில்லை.
மழை அல்லது வானிலை நமக்கு அதிர்ஷ்டாக இருக்கவில்லை. 2015 மற்றும் 2015 வறட்சியான ஆண்டுகளாக இருந்தன. பருவமற்ற ஆலங்கட்டி மழைகளுடன் வறட்சியும் இணைந்தது. இருந்தும் உணவு தானிய உற்பத்தி உயர்வாகவும், பணவீக்கம் குறைவாகவும் இருந்தது. 2009-10-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறப்பாகவே இருந்தது.

உலகளாவிய வளர்ச்சி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது ஒரு அசாதாரண சூழ்நிலை. இதனை ஜீரணித்துக் கொள்ள முடியாத சிலர் கற்பனையான மற்றும் வேடிக்கையான சிந்தனைகளுடன் இந்த சாதனையை குறைகூறினார்கள். இந்தியாவின் பொருளாதார வெற்றி என்பது ஒரு கடினமாக சூழலில் உறுதியான கொள்கை மற்றும் சிறப்பான நிர்வாகம் காரணமாக பெற்றது. நமது சில கொள்கைகள் பற்றி நான் பின்னர் விரிவாக தெரிவிக்கிறேன் என்றாலும், இப்போது நமது நிதி முடிவு குறித்து வலியுறுத்துகிறேன். நாம் நமது நிதி இலக்குகளை முந்தைய இரண்டு ஆண்டுகளிலும் எதிர்கொண்டிருக்கிறோம். மூலதன செலவுகள் அதிகரித்த போதிலும் நாம் நமது பற்றாக்குறையை குறைத்திருக்கிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு வரி வருவாயில் மத்திய அரசின் பங்கு வெகுவாக குறைக்கப்பட்ட போதிலும் இந்த பதினான்காவது நிதி கமிஷனில் இந்த குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2916-17-ல், 3.5 சதவிகித நிதிப் பற்றாக்குறையை நாம் இலக்காக வைத்திருக்கிறோம். கடந்த 40 ஆண்டுகளில் இரு இரண்டாவது குறைந்தபட்ச அளவாகும்.

நமது வளர்ச்சி விகிதம் பெரும் பொருளாதாரங்களில் மிக உயர்வானது என ஏற்கப்பட்டுள்ளது., இதில் சிலர் குழப்பமடைந்து இந்த வளர்ச்சி விகிதம் சரியாகத் தோன்றவில்லை என்றும் கூறினார்கள். அவர்களது குழப்பத்தை குறைக்கும் வகையில் உணர்வுகளுக்கு பதிலான சில உண்மைகளை கூறி அவர்களுக்கு என்னால் உதவ முடியும.

முதலில் கடனைப் பார்க்கலாம். செப்டம்பர் 2015க்குப் பிறகு கடன் வளர்ச்சியில் ஒரு வேகம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 2015 மற்றும் பிப்ரவரி 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் கடன் 11.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நிறுவனங்கள் துறையில் சமபங்கு மற்றும் பல்வேறு வகையான உள்நாட்டு மற்றும் அந்நிய கடன்களின் மூலமாக நிதி வருவாய் 2015-16-ன் முதல் மூன்று காலாண்டுகளில் 30 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் கடன் தர வரிசையில் சில சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளன. 2013 மற்றும் 2014ல் கடன் தரவரிசை உயர்ந்தப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையை விட தர வரிசை குறைக்கப்பட்ட நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகம். அந்த நிலைமை தற்போது உறுதியாக மாறியுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட எண்ணிக்கை அதிகமாகவும் தரம் குறைக்கப்பட்டவற்றின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. 2015+16ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் தரவரிசை குறைக்கப்படும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இணையாக 2 நிறுவனங்களின் தரம் உயர்த்தப்படுகிறது. இது சமீப ஆண்டுகளில் சிறந்த அளவாகும்.
குறைந்த அளவிலான இடத்தில் உள்ள நிறுவனங்களின் சூழல் சிறப்பாக உள்ளன. தரம் குறைப்பை விட தரம் உயர்வு அதிக வித்தியாசத்தில் உள்ளது. பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் இந்த விகிதம் 6.8 மடங்காகவும், நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரையில் இது 3.9 மடங்காகவும், சிறு நிறுவனங்களைப் பொறுத்தவரையில் இது 6.3 மடங்காகவும் உள்ளது.

பெரிய நிறுவனங்கள் துறையில் தான் தரக்குறைவு அதிகமாக காணப்படுகிறது. பெரிய வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கடனைத் திரும்பப் பெறுவதற்கு அரசும் ரிசர்வ் வங்கியும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த துறையினர் எழுப்பும் சத்தம் ஊடக கண்ணோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடனில் இருந்து முதலீட்டுக்கு சென்றால், நிகர அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் சாதனை அளவை எட்டியுள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் சில முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு அதிக சுவாரஸ்யமானதாகும். அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2015 வரை உரத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 224 மில்லியன் டாலர்களாக உள்ளது. அக்டோபர் 2013 முதல் செப்டம்பர் 2014 வரையிலான காலத்தில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீடு வெறும் ஒரு மில்லியன் டாலர் மட்டுமே, சர்க்கரை துறையில் இது 125 மில்லியன் டாலராக உள்ளது. முந்தைய ஆண்டு இது நான்கு மில்லியன் டாலராகத்தான் இருந்தது. வேளாண் இயந்திரங்கள் துறையில் இது 28 மில்லியன் டாலர்களில் இருந்து 57 மில்லியன் டாலர்களாக இரட்டிப்பாகியுள்ளது. இந்தத் துறைகள் அனைத்து கிராமப்புற பொருளாதாரத்துடன் நெருக்கமான இணைப்பை கொண்டவையாகும். இந்தத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்து வருவது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

செப்டம்பர் 2015 வரையிலான காலகட்டத்தில் கட்டுமான நடவடிக்கைகளில் அந்நிய நேரடி முதலீடு 316 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது. கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை 265 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் அந்நிய நேரடி முதலீடு 21 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளது. தீவிர வேலைவாய்ப்பு தரும் துறைகளில் இந்தியாவில் தயாரிப்போம் கொள்கையில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருப்பதற்கு இது வலுவான ஒரு சான்றாகும்.
ஏற்றுமதிகள், உற்பத்தி வெளிப்பாடு ஆகியவற்றுக்கான கடுமையான உலகளாவிய சுற்றுச்சூழலில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. எனினும் உற்பத்தியின் சார்பு துறைகள் வேகமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. நுகர்வோரின் வாங்கும் ஆற்றல் மற்றும் பொருளாதார நடவடிக்கைளுக்கான வலிமையான அறிகுறியாக கருதப்படும் மோட்டார் வாகன உற்பத்தி துறை 7.6 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது. வேலைவாய்ப்பு அதிகம் தரும் ஆயத்த ஆடைகள் துறை 8.7 சதவிகித வளர்ச்சியை சந்தித்துள்ளது. ஃபர்னிச்சர் உற்பத்தி 57 சதவிகிதம் வளர்ந்து இருப்பது அடுக்குமாடி வீடுகள் மற்றும் வீடுகள் விறபனையில் உயர்வு ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
எதிர்காலத்தை நோக்கிய பார்வையில், நான் வேளாண் துறை பற்றி குறிப்பிடுகிறேன். முன்பு விவசாயிகளின் வருவாயைவிட வேளாண் உற்பத்தி அளவுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கை நான் நிர்ணயித்துள்ளேன். இதனை நான் ஒரு சவாலாகவே குறிப்பிட்டுள்ளாம், இது வெறும் சவால் மட்டுமல்ல., ஒரு நல்ல யுக்தி, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திட்டங்கள், போதிய ஆதாரங்கள் மற்றும் நிடைமுறைப்படுத்துவதில் நல்ல நிர்வாக ஆகியவற்றின் மூலம் இந்த இலக்கு எட்டக்கூடியதுதான். நமது மக்கள் தொகையில் ஒரு பெரும் பகுதி வேளாண்மையை சார்ந்தே இருப்பதால், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது பொருளாதாரத்தின் இதர துறைகளுக்கு வலிமையான பயன்களைத் தரும்.

நமது யுக்தியை விளக்குகிறேன்.

முதலாவதாக, பட்ஜெட்டில் அதிக உயர்வுடன் பாசனத்தில் ஒரு பெரிய கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். பாசனத்தையும் தண்ணீர் சேமிப்பையும் இணைக்கும் ஒரு முழுமையான அணுகுமுறையை நாங்கள் எடுக்கிறோம். இதன் நோக்கம் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் அதிக பயிர்.

இரண்டாவதாக நாங்கள் தரமான விதைகள் மற்றும் சிறந்த ஊட்ட பயன்பாடு என்பதில் கண்ணோட்டம் செலுத்துகிறோம். மண்வள அட்டைகள் வழங்கப்படுவது ஒவ்வொரு நிலத்தின் தேவைகளுக்கு ஏற்ப துல்லியமான முறையில் விதைகளை தேர்ந்தெடுக்க உதவும். இது உற்பத்தி செலவைக் குறைப்பதுடன் நிகர வருவாயை அதிகரிக்கும்.

மூன்றாவதாக அறுவடையில் ஒரு பெரிய பகுதி அவை நுகர்வோரை சென்றடையும் முன்னதாகவே காணாமல் போய்விடுகிறது. அழுகும் பொருட்களைப் பொறுத்தவரையில் அது கொண்டு செல்லப்படும் போதே பாதிக்கப்படுகிறது. அழுகும் தன்மை இல்லாத பொருட்களைப் பொறுத்தவரையில் இந்த இழப்பு அவற்றை வைக்கும் போது ஏற்படுகிறது. சேமிப்பு கிடங்குகள் உள்கட்டமைப்பு மற்றும் குளிர் பதனக் கிடங்கு தொடர்கள் போன்றவற்றில் பெரிய முதலீடுகளின் மூலமாக அறுவடைக்கு பிந்தைய இழப்பை நாங்கள் குறைக்கிறோம். வேளாண் உள்கட்டமைப்புக்கான ஒதுக்கீட்டை நாங்கள் அதிக அளவு உயர்த்தியிருக்கிறோம்.

நான்காவதாக நாங்கள் உணவு பதப்படுத்துதல் மூலம் அதன் மதிப்பு கூடுதலை மேம்படுத்துகிறோம். உதாரணமாக சமீபத்தில் எனது அழைப்பை ஏற்று கோகோ கோலா நிறுவனம் சமீபத்தில் தனது குளிர்பானங்களில் பழச்சாற்றை சேர்க்கத் தொடங்கியுள்ளது.

ஐந்தாவதாக நாங்கள் தேசிய வேளாண்மை சந்தையை உருவாக்கி வேறுபாடுகளை போக்குகிறோம். ஒரு பொது மின்னணு சந்தை மேடை 535 வரையறுக்கப்பட்ட ஒட்டுமொத்த சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி விலையில் பெரிய பங்கு விவசாயிக்கு செல்வதையும், குறைந்த அளவு பங்கு இடைத்தரகர்களுக்கு செல்வதையும் உறுதிப்படுத்த விரும்புகிறோம். இதே நோக்கத்துடன் தான் இந்த பட்ஜெட்டில் உள்நாட்டு உணவு பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு அந்நிய நேரடி முதலீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆறாவதாக நாங்கள் பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இது விவசாயிகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஆபத்துக்களில் இருந்து விவசாயிகளை குறைந்த செலவில் பாதுகாப்பு என்பது முழுமையான நாடு தழுவிய பயிர் காப்பீட்டு திட்டமாகும். கடுமையான வானிலை ஏற்படும் போது அவர்களது வருவாய் பாதுகாக்கப்படுவதை தடுக்க இந்த திட்டம் உறுதி செய்யும்.

ஏழாவதாக சார்பு நடவடிக்கைகளின் மூலமாக கிடைக்கும் வருவாயை நாங்கள் அதிகரிப்போம். இவை கோழிப்பண்ணைகள், தேனீக்கள், பண்ணைக் குளங்கள் மற்றும் மீன்வளம் மூலமாக இருக்கும். நிலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மூங்கில் வளர்ப்பது, சூரிய மின் கோபுரங்கள் அமைப்புபோன்ற பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.
உற்பத்தியில் வளர்ச்சி

அதிக திறன்பற்ற விதைகள் பயன்பாடு

அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைப்பது

அதிக மதிப்பு கூடுதல்

குறைக்கப்பட்ட சந்தைப்படுத்தும் செலவுகள்

ஆபத்துக்கள் தவிர்ப்பு

மற்றும் சார்பு நடவடிக்கைகள்

ஆகியவை ஒன்றிணைக்கப்படும்.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கு எட்டப்படும் என நான் நம்புகிறேன். பிரபல வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் இதனை ஏற்றுக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பட்ஜெட்டுக்கு பின் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் விவசாயிகளை மையப்படுத்திய பட்ஜெட்டுக்காக எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் சார்ந்த வேளாண்மை திட்டத்தை அவர் வரவேற்றுள்ளார். அவர் மேலும் கூறியது இதுதான்,

இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு சாதமானதாக இருக்க முயற்சி செயதுள்ளது. வேளாண் மாற்றத்திற்காகவும் இளைஞர்களைக் கவர்ந்து அவர்களை வேளாண்மையில் தக்க வைக்கவும் விதைகள் தூவப்பட்டுள்ளன. வேளாண் துறைக்கான புதிய சகாப்தத்தின் விடியல் கண்ணில் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

நமது வளர்ச்சிக்கான சில திட்டங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி குறிப்பிடுகிறேன். ஏற்கெனவே நான் குறிப்பிட்டது போல சீர்திருத்தத்தில் இருந்து மாற்றம் தான் எனக்கு இலக்கு, சீர்திருத்தங்களின் நோக்கம் என்பது சாதாரண மக்களின் வாழ்க்கையில் மற்றத்தை ஏற்படுத்துவது. நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதில் நமது கண்ணோட்டத்தில் இருந்து இதனை தொடங்குகிறேன்.

இந்தியா போன்ற நாட்டில் பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் போது ஆதாரங்கள் அரிதாகும். சிறப்பான முறையில் நடைமுறைப்படுதடதுவதன் மூலம் ஆதாரங்கள் அதிகபட்சமாக பயன்படுத்தப்படுவது ஒரு புத்திசாலித்தரமான யுக்தியாகும். கொள்கைகள் அல்லது கொள்கைகள் என கூறப்படுபவற்றை அறிவிப்பது குறைந்த பயன்களையே தரும். சீர்திருத்தப்பட்ட கொள்கைகளை விடவும் நாம் அவற்றை செயல்படுத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இது பற்றி விளக்குகிறேன். 2013-ம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் அது பல்வேறு மாநிலங்களில நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பெரும்பானான செலவுகள் தரகர்கள், மற்றும் ஏழைகள் இல்லாதவர்களுக்கு செல்கிறது. இருந்தபோதிலும் புத்தகங்களில் அதன் செலவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு சட்டத்தை தற்போது நாங்கள் நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்துகிறோம். வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் ஏற்பட்டுள்ள கசிவுகளை நாங்கள் வெகுவாக குறைத்திருக்கறோம். இந்தப் பணம் யாருக்கு செல்ல வேண்டுமோ அவர்களுக்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு பயன் தரும் நம்பகமான சொத்துக்கள் உருவாவதையும் அது தரகர்களுக்கு பயனளிக்காமல் இருப்பதிலும் நாங்கள் கண்ணோட்டம் கொண்டுள்ளோம். நிதி உள்ளடக்கம் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் நாங்கள் இந்தப் பணியை செய்து முடித்து 200 மில்லியன் மக்களை வங்கி முறைக்கு கொண்டு வந்திருக்கிறோம்.

நடைமுறைப்படுதுவதில் எங்களது சாதனை மற்றும் ஊழல் குறைப்பு இப்போது நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே அது பற்றி விளக்குகிறேன். நிலக்கரி, தாதுக்கள் மற்றும் அலைக்கற்றை ஆகியவை வெளிப்படையாக ஏலம் விடப்பட்டு பெரும் தொகை பெறப்பட்டுள்ளது. நிர்வாக மேம்பாடு காரணமாக மின் பற்றாக்குறை போக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு அமைக்கப்படும் நெடுஞ்சாலை அதிக அளவில் போடப்பட்டுள்ளன. துறைமுகங்கள் சாதனை படைத்துள்ளன. பல்வேறு துறைகளில் நாங்கள் ஏராளமான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த தாபோல் மின் உற்பத்தி திட்டம் நமது ஒருங்கிணைந்த முயற்சி காரணமாக மீண்டும் செயல்படத் தொடங்கி மின் உற்பத்தி, பணி பாதுகாப்பு மற்றும் வங்கிகளின் வாராக் கடன்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. கொள்கை சீர்திருத்தங்கள் பற்றி கூறுகிறேன். இந்த அரசு பொறுப்புக்கு வந்தது முதல் பணவீக்கம் குறைந்திருப்பது பற்றி குறிப்பிட்டேன். பணக் கொள்கையை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகள் இதற்கு ஒரு பகுதி காரணம். கடந்த ஆண்டு நாங்கள் ரிசர்வ் வங்கியுடன் ரொக்க கட்டமைப்பு உடன்பாட்டை செய்து கொண்டுள்ளோம்.

இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான நிதி மசோதாவை இந்த ஆண்டு நாங்கள் தாக்கல் செய்திருக்கிறோம். இந்த திருத்தங்களின் படி ரிசர்வ் வங்கி பணவீக்க இலக்குகளை வைத்துக் கொள்வதுடன், ரொக்க கொள்கைக் குழுவின் மூலமாக ரொக்கக் கொள்கையை அமைக்கும். இந்தக் குழுவில் அரசின் சார்பில் உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்த சீர்திருத்தத்தின் மூலமாக ரொக்கக் கொள்கை ஒரு பணவீக்க கண்ணோட்டத்தை கையில் வைத்துக் கொண்டு வளர்ந்து வரும் பெரும் சந்தைகளில் இதுவரை இல்லாத வகையில் சுயாட்சி நிறுவனம் செயல்படும். இது வளர்ந்த நாடுகளில் இருப்பதை விட பெரியதாக இருக்கும். நமது நிதி ஒருங்கிணைப்பு பாதையில் இது நமது வலிமையான உறுதிப்பாட்டுக்கான சான்றாக இருக்கும்.
இன்னொரு பெரிய கொள்கை சீர்திருத்தம் பெட்ரோலியத் துறையில் செய்யப்படுகிறது. புதிய ஹைட்ரோகார்பன் எக்ஸ்ப்ளோரேஷன் லைசென்சிங் கொள்கையின் கீழ் விலை நிர்ணய மற்றும் சந்தைப்படுத்தும் சுதந்திரமும் வெளிப்படையாக வருவாய் பகிர்வு முறையும் இருக்கும். இது அதிகார கட்டுப்பாடுகளை போக்கும். செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நாங்கள் சந்தைப்படுத்தும் மற்றும் விலை நிர்ணய சுதந்திரத்தை அளித்திருக்கிறோம். தற்போதைய உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்கள் புதுப்பித்தலைப் பொறுத்தவரையில் நாங்கள் வெளிபடையான முறையை அறிமுகப்படுதுதியுள்ளோம். இதில் சமமான சதவிகித உயர்வு இருக்கும். இது நிச்சயமற்ற தன்மையைப் போக்கும்.

ரியல் எஸ்டேட் வரன்முறை சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ளது. இது ரியல் எஸ்டேட் சந்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, நிலம் வாங்குவோரையும் பாதுகாத்து, நேர்மையான மற்றும் ஆரோக்கியமான நடைமுறைகளை மேம்படுத்தும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த மசோதாவை நிறைவேற்றியதுடன், நாங்கள் வீடுகட்டுபவர்கள் மற்றும் வாங்குவோருக்கு புதிய நடுத்தர மற்றும் ஏழைகளுக்கான வரி ஊக்கத்தொகையையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

மின்சாரத் துறையில் உதய் திட்டம் மாநில அரசுகளுக்கான கட்டமைப்பை நிரந்தரமாக மாற்றியுள்ளது. இதற்கான இலக்குகளின் பின்புலத்தில் நம்பகமான ஊக்கதொகை இதன் செயல்திறனை ஊக்குவிக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் படிப்படியாக மாநில அரசுகள் விநியோக நிறுவனங்களின் இழப்புக்களை எடுத்துக் கொள்வதுடன் அதனை அவர்களது நிதி பற்றாக்குறை இலக்குகளுடன் எண்ண வேண்டும். இது அந்த மாநிலங்களின் பட்ஜெட் சுமைகளில் கடுமையை ஏற்படுத்தும். இது மாநிலங்கள் மின்சாரத் துறையில் சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கான சக்திவாய்ந்த ஊக்கத்தொகையை அளிக்கும். ஏற்கெனவே ஒன்பது மாநிலங்கள் நாற்பது சதவிகித அளவுக்கு மின் வினியோக நிறுவனங்களின் மொத்த கடனுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மத்திய அரசுடன் செய்து கொண்டுள்ளது. மேலும் ஒன்பது மாநிலங்களும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் அரசின் முழுமையான சீர்திருத்தங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருக்கக்கூடும். ஆண்டுக்கு மிகக்குறைவாக 1500 மெகாவாட் என்ற அளவில் இருந்து நாங்கள் ஆண்டுக்கு 10,000 மெகாவாட் என்ற அளவுக்கு முன்னேறியுள்ளோம். 175 கிகாவாட் என்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற இலக்கை நான் அறிவித்த போது பலரும் ஆச்சரியப்பட்டதுடன் சிலர் சந்தேகம் கொண்டனர். இருந்த போது இந்த மாதம் சர்வதேச எரிசக்தி முகமை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உயர்வு காரணமாக ஏற்கெனவே எரிசக்தி தொடர்பான கரியமில வாயுக் கசிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் சமீபத்தில் உள்நாட்டு நீர்வழிகள் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனால் திறன்வாய்ந்த இந்த போக்குவரத்து மூலமாக விரைவான முன்னேற்றம் ஏற்படும். இதனால் பயணிக்கக்கூடிய நீர்வழிகளின் எண்ணிக்கை 5-லிருந்து 106 ஆகும்.
அந்நிய நேரடி முதலீடு மூடிவைக்கப்பட்டிருந்த ரயில்வே, பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடுகள் அனுமதிக்கப்பட்டு, காப்பீடு போன்ற இதர துறைகளில் உயர்த்தப்படும் வகையில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை மாற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் காரணமாக ஏற்கெனவே பயன்கள் கிட்டத் தொடங்கியுள்ளன. இரண்டு புதிய லோகோமோடிவ் தொழிற்சாலைகள் 500 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று பீகாரில் ஜிஇ மற்றும் அல்ஸ்டாம் ஆகிய நிறுவனங்களால் கட்டப்படுகின்றன. காப்பீட்டுத் துறையில் 9000 கோடி ரூபாய், சுமார் 150 மில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு, உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்களால் 12 நிறுவனங்களில் முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தைகளில் அந்நிய நேரடி முதலீடு வரம்புகளை நாங்கள் அதிகரித்திருப்பதுடன் அவை பட்டியலிடப்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. தனியார் சம்பங்கு மூலதனத்தை ஊக்குவிக்க நாங்கள் மேற்கெண்டுள்ள சீர்திருத்தங்கள் பற்றி நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறோம். மேலும் புதிய நிறுவனங்களுக்கான முறைகள் குறித்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தப் புதிய பொருளாதாரம் தான் உங்களது குழு விவாதங்களில் கண்ணோட்டமாக உள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் நாங்கள் மேற்கொண்டுளள நடவடிக்கைகள் குறித்து கூறுகிறேன். இதற்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்கிறேன். இந்தியா மூலதனம் குறைவான அதிக தொழிலாளர்கள் நிறைந்த நாடு. இருந்த போதிலும் நிறுவன வரி கட்டமைப்பு மூலதனம் சார்ந்த உற்பத்தி சாகமாக உள்ளது. விரைவுபடுத்தப்பட்ட தேய்மானம் மற்றும் முதலீட்டு படிகள் போன்ற வரிப் பயன்கள் தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு செயல்கையான சார்புத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் வரன்முறைகளும் முறைசாரா வேலைவாயப்பை சமூக பாதுகாப்பு இன்றி மேம்படுத்தியுள்ளது. இதில் முறையான வேலைவாய்ப்பு இல்லை. இதனை மாற்றுவதற்கு நாங்கள் முக்கியமான இரண்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

முதலாவதாக வரி தணிக்கைக்கு உட்பட்டு ஏதேனும் நிறுவனம் தனது பணித்திறனை அதிகரித்தால், அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய செலவுகளில் 30 சதவிகித வரிக்கழிவு அளிக்கப்படும். முன்னதாக இந்தப் பயன்கள் சில தொழிற்சாலைகளுக்கு மட்டும் கிடைத்து வந்தது என்பதுடன் செய்ய முடியாத சில கட்டுப்பாடுகளும் இருந்தன. இது தற்போது சேவைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் அளிக்கப்படுவதுடன், இதில் மாதம் 25000 ரூபாய் ஊதியம் பெறும் தொழிலாளர்கள் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக பணியாளர் வைப்பு நிதியில் இணையும் அனைத்து புதிய உறுப்பினர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் பொறுப்பை அரசு எடுத்துக் கொண்டுள்ளது. இது மாதம் ரூ 15000 வரை ஊதியம் பெறுபவர்களுக்கு பொருந்தும். இந்த நடவடிக்கைகளின் மூலம் வேலையில்லாதவர்கள் மற்றும் முறைசாரா வேலையில் இருப்பவர்கள் பயன்பெறுவார்கள்.
அரசு பணிக்கு ஆட்களை சேர்ப்பதில் ஊழலை ஒழிக்கும் ஒரு சீர்திருத்தமாக நாங்கள் நடுத்தர மட்டத்திலான பணிகளுக்கான ஆள்சேர்க்கையில் நேர்முகத் தேர்வுகளை நீக்கியுள்ளோம். அவர்கள் இனி வெளிப்படையான எழுத்து தேர்வு முடிவுகள் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு முடிவுகள் தனியார் கல்லூரிகளாலும் பயன்படுத்தப்படுவதை நீங்கள் அறிவீர்கள். தொழிலாளர் சந்தையை மேம்படுத்தவும், வேலையில்லாதவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மேலும் ஒரு நடவடிக்கையை அறிவிப்பதில் நான் பெருமை அடைகிறேன். அரசு மற்றும் பொதுத் துறை அமைப்புகள் ஏராளமான பணியாளர் நியமன தேர்வுகளை நடத்துகின்றன. இந்த தேர்வுகளின் முடிவுகள் இதுவரை அரசிடமே வைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன. இனி இந்தத் தேர்வு முடிவுகள் மற்றும் தேர்வு எழுதுவோரின் விவரங்கள் பணிநியமனம் செய்பவர்களுக்கு தேர்வாளரின் ஒப்புதலுடன் அளிக்கப்படும். இது நேர்மறையான பயன்களை அளிக்கும். இது தனியார் துறையில் உள்ள வேலை அளிப்பவர்களுக்கு தயார் நிலையிலான தகவல் தொகுப்பாக இருக்கும். இது ஆட்களைத் தேடும் செலவுகளை பணியாளர்கள் மற்றும் பணி அளிப்போருக்கு குறைக்க உதவும். இதில் பணி நியமனத்திற்கானவர்களைப் பற்றி ஒப்பீடு செய்ய பணியாளர் அதிகம் உள்ள இடங்களிலும் இதர பகுதிகளிலும் உதவும்.

பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஆண்டு இதுவரை 31 மில்லியன் தொழில்முனைவோருக்கு 19 மில்லியன் டாலர் அளவுக்கு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 77 சதவிகித தொழில்முனைவோர் பெண்கள் என்பதையும் 22 சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் என்பதையும் அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். ஒரு தொழில்முனைவர் நீடித்த வேலையை அளித்தால் அதன் மூலம் 31 மில்லியன் பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். நிமிர்ந்து நில் இந்தியா திட்டமும் 25000 தொழில்முனைவோர்களான பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அளிக்கும்.

திறன் மேம்பாட்டில் எனது அரசில் சீர்திருத்தங்கள் பட்ஜெட்டில் தெரியவந்துள்ளன. மேலும் நாங்கள் இரண்டு முக்கியமான சீர்திருத்தங்களை கல்வித் துறையில் அறிவித்துள்ளோம். . இது பற்றி நான் விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறேன். உயர் கல்வி நிறுவனங்கள் அதிகாரம் பெற்ற உயர் தரத்தைப் பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். முதல் கட்டமாக 10 பொது மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வரன்முறை சார்ந்த கட்டமைப்புகளை அளித்து அதன் மூலம் அவை உலகத் தரமாக கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களாக உருவெடுக்கும். இந்த நிறுவனங்களுக்கான வரன்முறை கட்டமைப்புகள் தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவின்சிலில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். அவர்கள் கல்வி, நிர்வாகம் மற்றும் நிதி விவகாரங்கள் முழுமையான சுயாட்சி கொண்டவையாக இருக்கும். அவர்களுக்கு அடுத்து ஐந்தாண்டுகளுக்கு கூடுதல் ஆதாரங்கள் நாங்கள் அளிப்போம். இது சாதாரண இந்தியர்களும் உலகத் தரமான பட்டப்படிப்புகளை குறைந்த செலவில் அளிக்கும். இந்த முயற்சி உயர்கல்வி வரன்முறை அமைப்புகளின் பயணத்தின் தொடக்கமாக இருக்கும்.

இவர்கள் மேலிருந்து கீழ் வரை கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இன்றி வழிகாட்டிகளாக இருப்பார்கள். வரன்முறை சீர்திருத்தங்களின் மூலமாக நாங்கள் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உலகத் தரத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்.
மற்றொரு முயற்சி பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்படுகிறது. அணுகுதலில் அதிக அளவு முன்னேற்றம் மற்றும் மாணவர் ஆசிரியர் விகிதத்தில் நாங்கள் சாதனை ஏற்படுத்தியுள்ளோம். இன்றைய அறிவுசார் பொருளாதாரம் என்பது அதன் பள்ளிகளில் இருந்து வெளிவருவோரின் தரத்தில் உள்ளது. இந்த தரத்தை மேம்படுத்துவது தான் அரசின் முதன்மை நோக்கம். சர்வ சிஷா அபியான் திட்டத்தின் கீழ இதற்கான ஆதாரங்களை நாங்கள் அதிகரிப்போம். இந்த நிதி உள்ளூர் முயற்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு கல்வியை மேம்படுத்தும். நீங்கள் அனைவரும் பெற்றோர்களாக இருப்பதால், இவற்றை வரவேற்பீர்கள் என நான் நம்புகிறேன்.

நிறைவாக, நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. சில பயன்களை இதுவரை நாங்கள் எட்டியுள்ள சாதனைகள் மக்களின் ஆதரவுடன் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளித்துள்ளது.

இது கடினமானது என்று எனக்குத் தெரியும்,

இருந்த போதிலும் இது சாத்தியமானது என நான் உறுதியாக நம்புகிறேன்.

அது நடக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது,.

நன்றி.

•••••