Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி


2019-ஆம் ஆண்டு இதே  நாளில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தி, நாட்டுக்காக அவர்கள் செய்த சேவையை நினைவுகூர்ந்தார்.

பிரதமர் மோடி,வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; “2019-ஆம் ஆண்டு இந்த நாளில் புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு எனது மரியாதையை செலுத்துவதோடு, நாட்டுக்காக அவர்கள் செய்த சேவையை நினைவு  கூர்கிறேன். அவர்களது வீரமும் தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் நமது நாட்டை வலிமை மற்றும் வளமையாக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்துள்ளது.”

***************